For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

SBI வங்கியில் வேலை.. 86 ஆயிரம் சம்பளம்.. பிஇ, பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!! செம சான்ஸ்..

Public Sector Banks are filling the vacancies through written test, interview etc. In that way, State Bank of India has released the vacancies for Special Officers.
04:25 PM Dec 05, 2024 IST | Mari Thangam
sbi வங்கியில் வேலை   86 ஆயிரம் சம்பளம்   பிஇ  பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்     செம சான்ஸ்
Advertisement

பொதுத்துறை வங்கிகள் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு உள்ளிட்டவை மூலமாக காலிப்பணியிடங்களை நிரப்பி வருகின்றன. அந்த வகையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சிறப்பு அதிகாரிகளுக்கான காலி பணியிடங்களை வெளியிட்டுள்ளது.

Advertisement

பணியிடங்கள் எண்ணிக்கை : சிறப்பு அதிகாரிகள் பிரிவில் சிவில், எலெக்ட்ரிக்கல், தீயணைப்பு என மொத்தம் 169 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உதவி மேலாளர் (சிவில்) 43

உதவி மேலாளர் (எலெக்ட்ரிக்கல்) 25

உதவி மேலாளர் (தீயணைப்பு) 101

வயது தகுதி : 2024 அக்டோபர் 1-ம் தேதி அன்று, குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். மத்திய அரசின் படி வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி : துறை சார்ந்த பிரிவில் B.E / B. Tech பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சிவில் பிரிவிற்கு சிவில் இன்ஜினியரிங் மற்றும் எலெக்ட்ரிக்கல் பிரிவிற்கு எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம் : குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதியம் : சிறப்பு அதிகாரிகள் பிரிவில், உதவி மேலாளர் காலிப்பணியிடங்களுக்கு ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://sbi.co.in/ என்ற இணையதளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 வசூலிக்கப்படுகிறது. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

Read more ; தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப் போகும் மழை..!! 7 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..!!

Tags :
Advertisement