வீட்டு சுவர்களில் கரையான் தொல்லையா..? இதை ட்ரை பண்ணி பாருங்க.. அப்புறம் வரவே வராது..!
லட்சக்கணக்கில் செலவு செய்து மனதிற்கு பிடித்த மாதிரி வீடு கட்டி குடியேறினால் அத்துடன் வேலைகள் முடிந்ததாக அர்த்தமில்லை. பராமரிப்பு பணிகளை தொடர்ந்து செய்தால் மட்டுமே வீட்டின் ஆயுள் நீடிக்கும். வீட்டிற்குள் எறும்பு, எலி, கட்டெறும்பு, அரணை, புழுக்கள் ஆகியவற்றால் நமக்கு பிரச்னை ஏற்படும். அதிலும் குறிப்பாக கரையான் சுவர், மரப் பொருட்களை அரித்துவிடும். கறையன் தொல்லை பல வீடுகளில் உள்ளது. முத்திய பிறகே அதன் பிரச்னை வீட்டில் வசிப்பவர்களுக்கு தெரிய வருகிறது. ஆரம்பத்திலேயே பிரச்னையை கண்டறிந்து அதை சரி நல்லது. வீட்டிற்குள் கரையான் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொருட்களை கரையான் பாதித்துள்ளதை எப்படி அறியலாம்? கரையான் அரித்துள்ள இடங்களில் குழாய்கள் போன்ற மண்ணரிப்புகளை உங்களால் காண முடியும். மேலும் உங்களது மர சாமான்களை சுற்றி அடிக்கடி மரத்தூள் சேர்கிறது என்றால் அங்கு கரையான் அரித்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். உங்கள் சுவர்களில் விரிசல், ஜன்னல்கள் அல்லது கதவுகளில் அரிப்பு, ஒருவித ஈரப்பத வாசனை போன்றவை கரையான்கள் இருப்பதற்கான சில அறிகுறிகள் ஆகும்.
ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துங்கள் : வீட்டின் மூலைகளில் அதிக ஈரப்பதம் இருந்தால், அதை தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுங்கள். சுவர்களில் கசிவு ஏற்பட்டாலும், உடனடியாக சரி செய்து, ஈரப்பதத்தை அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
உப்பு : வீட்டில் கரையான்கள் தென்படும் இடம் இருந்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக உப்பைத் தூவலாம் அல்லது உப்பு நீரில் துடைக்கலாம்.
மரப்பொருட்கள் பராமரிப்பு : மழைக்காலத்தில் கரையான்கள் தாக்காமல் பாதுகாக்க, ஆண்டுக்கு ஒருமுறை வீட்டின் மரப்பொருட்கள் மற்றும் கதவுகளில் பெயிண்ட் அல்லது வார்னிஷ் பூச வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கரையான்களிடம் இருந்து அவை பாதுகாக்கப்படும்.
வேப்ப எண்ணெய் : வேப்ப எண்ணெய் இயற்கையான பூச்சிக்கொல்லியாகும். அதன் உதவியுடன் நீங்கள் கரையான்களை அகற்றலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் வேப்ப எண்ணெய் தடவி வந்தால் கரையான்கள் திரும்ப தாக்காது.
போரிக் அமிலம் : நீங்கள் மழைக்காலத்தில் கரையான் பாதிக்கப்பட்ட பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போரிக் அமிலப் பொடியை தூவ வேண்டும். இதனால் கரையான்கள் நீங்கும்.
வினிகர் மற்றும் எலுமிச்சை : ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அரை கப் தண்ணீர், அரை கப் வினிகர் மற்றும் 2 எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கரையான் இருக்கும் பகுதிகளில் தெளித்தால் உடனடியாக அவை விலகி விடும்.
Read more ; குழந்தைகளுக்கு மறக்காம இந்த பழக்கங்களை சொல்லிக்கொடுங்க.. அவங்க வெற்றி பெறுவது உறுதி..!