"தடையில்லா சான்றிதழ் தந்தவர்களுக்கு நன்றி" -நயன்தாரா..! தனுஷ் பெயர் இடம்பெறவில்லை..!
தடையில்லா சான்றிதழ் தந்தவர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டு, பலரது பெயரை குறிப்பிட்டு நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தனுஷின் பெயர் இல்லாதது மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர், நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாகவே அதிலிருந்து எந்தவொரு வீடியோவும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் தான், நயன்தாரா திருமண வீடியோடிவின் ஆவணப்படமான "Beyond The Fairy தாளே" ட்ரெய்லர் வெளியானது.
வெளியான அந்த ட்ரைலரில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி கேட்டு தனுஷ் நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நயன்தாரா தனுஷ் தனுஷ் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. மேலும் இந்த ஆவணப்படமும் நெட்பிளிக்ஸ் ott தளத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளுடன் இரு தினங்களுக்கு முன்னதாக வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தனது திருமணம் குறித்த ஆவணப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் தந்தவர்களுக்கு நன்றி எனக்கூறி சில பெயர்களை குறிப்பிட்டு நயன்தாரா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நடிகர் தனுஷின் பெயர் இடம்பெறவில்லை. மேலும் நயன்தாராவின் அறிக்கையில், "நமது ‘Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரைப் பயணத்தில், நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மிகவும் இன்றியமையாதது. அதனால், அந்த படங்கள் குறித்த நினைவுகளும், ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டும் என உங்களை அணுகியபோது, எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த அறிக்கையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரி கான், இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர், திரு.சுபாஸ்கரன் அல்லிராஜா (லைகா புரொடக்ஷன்ஸ்), ஐசரி கே. கணேஷ் (வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்), கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். சுரேஷ் மற்றும் திருமதி அர்ச்சனா கல்பாத்தி (ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட்), உதயநிதி ஸ்டாலின் & திரு செண்பகமூர்த்தி (ரெட் ஜெயண்ட்), கே.இ.ஞானவேல்ராஜா (ஸ்டுடியோ கிரீன்), ஏ.ஆர்.முருகதாஸ் (ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் & ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ்), தெலுங்கு நடிகர் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் 'மெகா பவர் ஸ்டார் திரு. ராம் சரண் உள்ளிட்ட பலரின் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார். இந்த பெயர் பட்டியலில் நடிகர் தனுஷின் பெயர் இடம்பெறாதது மேலும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
Read More: மனைவியை பிரிந்த ஏ.ஆர். ரஹ்மானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? சாய்ராவுக்கு எவ்வளவு பங்கு?