பொதுத்தேர்வுகளில் முறைகேடுகள் தடுக்கும் மசோதா 2024: முக்கிய அம்சங்கள்.!
நாடு முழுவதும் நடைபெறும் பொது தேர்வுகள் மற்றும் பொது நுழைவுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக வழிவகை செய்யும் புதிய மசோதாவுக்கு பாராளுமன்ற மக்களவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும் அரசு ஆட்சேர்ப்பு தீர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் படி பொதுத்தேர்வுகள் நுழைவுத்தர்வுகள் மற்றும் அரசு ஆட்சியர் தீர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு பத்தாண்டுகள் வரை சிறை தண்டனையும் ஒரு கோடி ரூபாய் அபராதமும் வழங்கும் வகையில் மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்கள் அவையிலும் ஒப்புதல் பெற்ற பின் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதலுடன் சட்டமாக நடைமுறைக்கு வரும். பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் மசோதாவை முன்மொழிந்த மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் திறமையான மாணவர்கள் மற்றும் விண்ணப்பதாரர்களின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த மசோதா முன்மொழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா திங்கள்கிழமை மக்களவையில் முன்மொழியப்பட்டது. மேலும் இந்த மசோதா மாணவர்களை குறிவைத்து தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக அரசு தேர்வுகள் மற்றும் பொது நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளை செயல்படுத்தும் மாபியா கும்பல்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் அரசு தேர்வுகளிலும் பொது நுழைவுத் தேர்வுகளிலும் முறைகேடுகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுகளுக்கான உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவை இந்த மசோதா முன்மொழிகிறது. கணினி மயமாக்கப்பட்ட பொது தேர்வுகளை மேலும் பாதுகாப்பானதாக நடத்துவதற்கான பரிந்துரைகளை தொழில்நுட்ப உயிர் மட்ட குழு வழங்கும்.
இந்த உயர்மட்ட குழு டிஜிட்டல் பிளாட்பார்ம்களை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுதல் தவறில்லாமல் தடுக்கக்கூடிய தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பிற்கான வழிமுறைகளை உருவாக்குவது மற்றும் தேர்வு நடைபெறும் இடங்களில் மின்னணு கண்காணிப்பை உறுதி செய்வது மற்றும் நாடு முழுவதிலும் தேசிய தரநிலை மற்றும் சேவைகளை உருவாக்குவது போன்ற பாதுகாப்பான தேர்வு நடத்துவதற்குரிய நெறிமுறைகளை ஒழுங்குபடுத்தும் .
இந்த மசோதா பொது தேர்வுகளிலும் பொதுநிலை உத்தரவுகளிலும் நடைபெறும் ஆள்மாறாட்டம் வினாத்தாளை தேர்வுக்கு முன்பாகவே வெளியிடுவது மற்றும் கும்பலாக தேர்வுகளில் முறை கேடு செய்வது போன்றவற்றை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வு முறைகளில் அதிக வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மையைக் கொண்டு வருவதையும், இளைஞர்களின் கடின உழைப்பு மற்றும் உண்மையான மற்றும் நேர்மையான முயற்சிகள் வீண் போகாது, வெகுமதி கிடைக்கும் என்பதையும், அவர்களின் எதிர்காலம் பாதுகாப்பானது என்பதையும் இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
.ஏமாற்றுவதற்காகவோ அல்லது பண ஆதாயத்திற்காகவோ போலி இணையதளத்தை உருவாக்குதல், போலித் தேர்வு நடத்துதல், போலி அனுமதி அட்டைகள் அல்லது ஆஃபர் லெட்டர்களை வழங்குதல் அல்லது பண ஆதாயம் மற்றும் இருக்கை ஏற்பாடுகளில் கையாளுதல், வேட்பாளர்களுக்கு நியாயமற்ற வழிகளைக் கையாள்வதற்கு வசதியாக தேதிகள் மற்றும் ஷிப்ட்களை ஒதுக்கீடு செய்தல் போன்றவை தற்போது முன்மொழிவு பட்டிருக்கும் மசோதாவில் தண்டனைக்குரிய குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் முறைகேடுகள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் அல்லது நபர்களும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படுவார்கள், ஆனால் இது 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் மற்றும் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு தேர்வு மையத்தில் முறைகேடு நடைபெற்றால் அந்தத் தேர்வு நடத்தும் சேவையை வழங்கும் நபருக்கு 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் அந்தத் தேர்வு நடத்துவதற்கான விகிதாச்சார செலவு அவரிடமிருந்து வசூலிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடத்தும் சேவையை வழங்குபவர்கள் அடுத்த நான்கு வருடங்களுக்கு எந்தவிதமான பொதுத்தேர்வு நடத்தும் சேவையை வழங்குவதிலிருந்து தடை செய்யப்படுவார்கள்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி), ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (எஸ்எஸ்சி), ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (ஆர்ஆர்பி), இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (ஐபிபிஎஸ்) மற்றும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (என்டிஏ) ஆகியவற்றால் நடத்தப்படும் ஆட்சேர்ப்பு தேர்வுகளும் இந்த மசோதாவிற்கு பொருந்தும். இந்த பொது தேர்வுகளிலும் முறைகேடுகள் நடைபெறும் பட்சத்தில் இந்த மசோதாவின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.