For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Public Examination | 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்..!!

01:27 PM Feb 20, 2024 IST | 1newsnationuser6
public examination   10  12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்
Advertisement

10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆண்டு இருமுறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

Advertisement

Public Examination | மத்திய கல்வி அமைச்சகமானது கடந்த 2023ஆம் ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் என்றும், மாணவர்கள் விருப்பப்படி ஒரு முறை அல்லது இரண்டு முறையும் தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது. மாணவர்களின் செயல் திறன் எந்த தேர்வில் சிறப்பாக உள்ளதோ அதை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று உறுதியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை எழுத அனுமதிக்கும் திட்டம் வரும் 2025 – 26ஆம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இது ஒரு தரப்பினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், இன்னொரு தரப்பினர் ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எப்படி எழுதுவது என்று கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனாலும் மத்திய அரசின் இந்த திட்டத்தில் அனைவரும் இரண்டு முறையும் தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இரண்டு முறை எழுதினாலும் அதில் எதில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார்களோ அதுதான் கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Read More : https://1newsnation.com/senthil-balaji-court-orders-enforcement-department-to-take-action-in-senthil-balaji-case/

Tags :
Advertisement