முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

7 பெண்களை அடுத்தடுத்து கொன்ற சைக்கோ..!! தோண்ட தோண்ட சடலங்கள்..!! அதிர்ந்துபோன போலீஸ்..!!

02:30 PM Dec 14, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தெலங்கானா மாநிலம் பெத்தமுல் நகரைச் சேர்ந்தவர் கிஸ்தப்பா. இவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணை கடத்திச் சென்று கொலை செய்ததாக புகார் வந்ததை அடுத்து அதை விசாரித்த காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அவர் பல பெண்களை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். கிஸ்தப்பாவால் ஏழாவதாக கொல்லப்பட்ட அந்த பெண், கடந்த நவம்பர் 29ஆம் தேதியன்று காணாமல் போயுள்ளார்.

Advertisement

அந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அந்தப் பெண் கடைசியாக கிஸ்தப்பாவை சந்தித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, ​​அந்த பெண்ணுடன் தான் பேசியதாகவும், ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என்பது பற்றி எதுவும் தெரியாது என்றும் கிஸ்தப்பா கூறியுள்ளார்.

ஆனால், அவரது நடத்தை மற்றும் பதில்கள் சரியாக இல்லாததால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. பிறகு நடந்த முழுமையான விசாரணையின் கிஸ்தப்பா தான் அந்த பெண்ணை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். விசாரணையில் கிஸ்தப்பா கடைசியாக கொன்ற பெண்ணை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று சேலையால் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. கிஸ்தப்பா அந்தப் பெண்ணிடம் இருந்து பணம், வெள்ளிக் கொலுசுகளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கிஸ்தப்பா இந்த பெண்ணுக்கு முன் கிட்டதட்ட 6 பெண்களை கொன்றுள்ளாராம். கூலிவேலை செய்யும் பெண்களை குறிவைத்து அவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாங்கிக்கொடுப்பதாகக் கூறி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச்சென்று அவர்களை கொடூரமாக கொன்றுள்ளார். அவர்களிடம் இருந்து செயின், பணம், கொலுசு ஆகியவற்றை திருடிக்கொண்டு சடலங்களை அடையாளம் தெரியாமல் அழித்து வீசிவிட்டு சென்றுவிடுவதாக கூறப்படுகிறது. இந்த திடுக்கிடும் தகவல்களை போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள கிஸ்தப்பாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
காவல்துறைதெலங்கானா மாநிலம்பெண்கள்
Advertisement
Next Article