PSLV-C60: வெற்றிகரமாக பிரிந்த விண்கலங்கள்..! சாதனை படைக்குமா இந்தியா..!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து இரண்டு விண்கலங்கள் வெற்றிகரமாக விண்ணில் பிரிந்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோதீவிரம் காட்டி வருகிறது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக 'ஸ்பேடெக்ஸ்' (SpaDeX) எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் இந்த திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் எஸ்.டி.எக்ஸ்.A, எஸ்.டி.எக்ஸ்.B என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களுடன் இன்று இரவு சரியாக 10 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
இந்த பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டில் இருந்து எஸ்.டி.எக்ஸ்.A மற்றும் எஸ்.டி.எக்ஸ்.B செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பிரிந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். மேலும் செயல்பாடுகள் திட்டமிட்டபடி செயல்படுவதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த ஸ்.டி.எக்ஸ்.A, எஸ்.டி.எக்ஸ்.B என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்கள், பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள வெவ்வேறு சுற்றுப்பாதையில் தற்போது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது தனித்தனியாக விண்ணில் இருக்கு இரண்டு செயற்கைக்கோள்களையும் இணைய செய்வதற்கான(space docking technology) சோதனை தற்போது நடந்து வருகிறது. இந்த space docking சோதனை வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா சீனா இந்த மூன்று நாட்டை தொடர்ந்து இதை சாதித்த 4வது நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவில் இருந்து மண் துகல்களை பூமிக்கு கொண்டு வந்து ஆராய்ச்சி செய்ய இந்த space docking technology உதவியாக இருக்கும். எதிர்காலத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவும், விண்வெளி ஆய்வு மையம் அமைக்கவும், இந்த திட்டம் பேருதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: விஜயை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் அண்ணாமலை..!! என்ன விஷயம்..?