முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகமே...! இன்று காலை 11 மணி முதல்... 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்..!

05:50 AM May 13, 2024 IST | Vignesh
Advertisement

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் முழுவதும் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று முற்பகல் 11.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட USER ID , PASSWORD- ஐக் கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உரிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ( Provisional Certificate ) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Advertisement

அச்சான்றிதழ்களில் விவரங்களைச் சரிபார்த்து , தலைமையாசிரியரின் உள்ள கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டுத் இன்று முதலே மாணவர்களுக்கு வழங்கலாம். மாணவர்கள் தங்களது பிறந்த தேதி , பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி , பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் , உரிய மதிப்பெண் பட்டியலை ( Statement of Marks ) தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags :
10th public examEdu departmentmark sheetPublic w
Advertisement
Next Article