”தமிழ்நாட்டிற்கே பெருமை”..!! இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் முதலமைச்சர் முக.ஸ்டாலின்..!!
இன்றைக்கு மனிதர்களாக உள்ள நாம், பல லட்சம் ஆண்டுகளாக பரினாமமடைந்து வந்திருக்கிறோம். இந்த வளர்ச்சிபாதையை கற்காலம் (Stone Age), வெண்கல காலம் (Bronze Age), இரும்பு காலம் (Iron Age) என்று ஆய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். கற்காலத்தில் நாம் பெரியளவில் நாகரிகமடையவில்லை. அப்போது வேட்டை, உணவு, தங்குவதற்கே மிகப்பெரிய போராட்டமாக இருந்தது.
அதன் பிறகு தான், வெண்கலம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 3500 முதல் 1200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காலத்தையே வெண்கல காலம் என்று ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள். அதன் பிறகு மனிதன் இரும்பை கண்டுபிடிக்கிறான். கூட்டு வாழ்க்கை, உணவு தயாரித்தல், விவசாயம் என மனிதன் மாறியிருக்கிறான்.
இந்தியாவை பொறுத்தவரை சிந்து சமவெளி நாகரிகம்தான் மிக பழமையானது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அதற்கு இணையான நாகரிகம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டது. இது மொத்த இந்தியாவே தமிழ்நாட்டை பெருமையுடன் பார்த்தது. இப்படி இருக்கையில், சிந்து சமவெளியில் வெண்கல காலம் நிலவி வந்தபோது, தமிழ்நாட்டில் இரும்பு காலம் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அப்படியென்றால், சிந்து சமவெளி நாகரிகத்தை காட்டிலும் நாம் ஒரு படி முன் தான் இருந்துள்ளோம்.
இதுதொடர்பான ஆய்விலும் கூட தமிழ்நாட்டில் இரும்புக் காலம் முன்னதாகவே தொடங்கிவிட்டது என்பது நிரூபணமாகியுள்ளது. இதைத் தான் தமிழ்நாடு அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இன்று காலை 10 மணியளவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ”கீழடி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம்” ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் இணையதளத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். மேலும், இந்நிகழ்வில் இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலையும் முதல்வர் வெளியிடவுள்ளார்.
Read More : முதுகுவலியால் கடும் அவதியா..? இனி கவலை வேண்டாம்..!! இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க போதும்..!!