மாணவிக்கு நீதி கேட்டு தடையை மீறி பேரணி..!! நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் அதிரடி கைது..!!
சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவிக்கு நடந்த வன்கொடுமைக்கு நீதி கேட்டு பாஜக மகளிர் அணியினர் மதுரையில் இருந்து சென்னைக்கு பேரணியாக செல்ல முடிவு செய்தனர். இந்நிலையில், தடையை மீறி பேரணி செல்ல முயன்ற நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாஜகவினர் மதுரையில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டு பாஜக மகளிர் அணி சார்பில் மதுரையில் இன்று (ஜனவரி 3) பேரணி நடைபெறும் எனவும், இதனைத்தொடர்ந்து தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. பேரணிக்கு அனுமதி கேட்டு மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் திலகர் திடல் காவல் நிலையத்தில் மனு அளித்திருந்த நிலையில், பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.