For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Processed Foods: பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உயிருக்கு ஆபத்து.!! பதற வைக்கும் ஆய்வு முடிவுகள்.!!

07:04 PM May 10, 2024 IST | Mohisha
processed foods  பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உயிருக்கு ஆபத்து    பதற வைக்கும் ஆய்வு முடிவுகள்
Advertisement

மிகவும் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை என்பவர்களுக்கு இதய நோய் புற்றுநோய் மற்றும் சுவாச நோய் பாதிப்புகளால் இறக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இறப்பதற்கான காரணங்களில் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவு முக்கிய காரணம் வகிப்பதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

Advertisement

இயந்திர மயமாகிவிட்ட இந்த உலகில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பெரிய அளவில் பரவி இருக்கிறது. இந்த உணவுகள் நீண்ட நாட்கள் கேட்டு போகாமல் இருப்பதற்காக பல்வேறு ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த உணவுகள் உடல் பருமன் சர்க்கரையை நோய் மற்றும் இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் கொள்வதால் மனிதனின் ஆயுள் குறையும் என கண்டறிந்துள்ளது.

தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் தொடர்பாக ஹார்வார்டு பல்கலைக்கழகம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சியை நடத்தியது. 1,14,000 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்த ஆய்வு தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்களை எடுத்துரைக்கிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் தயாரிப்பில் உணவுப் பொருளானது பல்வேறு படிநிலைகளை கடந்து சமைக்கப்படுகிறது. மேலும் இவற்றில் அதிக அளவில் மசாலா மற்றும் சமையல் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. நன்றியில் சிலவற்றின் பெயர் எச்சரிக்க முடியாத அளவிற்கு கடினமாக இருக்கிறது. ஆறு தயாரிக்கப்படும் பாக்கெட் உணவுகளான தின்பண்டங்கள், சர்க்கரை கலந்த பானங்கள் பர்கர் மற்றும் பிரெஞ்ச் ப்ரைஸ் போன்ற துரித உணவுகளில் பெரும்பாலும் கலோரிகள், கொழுப்பு, சர்க்கரை மற்றும் சோடியம் அதிகமாக இருக்கும் அதே சமயம் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருக்கும்.

ஒரு மனிதனின் ஆயுள் மீதான எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் அதிக அளவிலான மசாலாக்கள் இவற்றின் தீமைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்த மசாலாக்கள் உணவுப் பொருட்களின் சுவையை மேம்படுத்துவதோடு உன் பொருள் கெட்டுப் போகாமல் நீண்ட நாள் இருக்க பயன்படுகிறது. இவை மனிதனின் உடல்நலத்தில் மிகப்பெரிய தீமையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் நைட்ரைட்கள் மற்றும் நைட்ரேட்டுகள் சேர்க்கப்படுகிறது. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் தன்னை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல உணவு பானங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்புகள் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கு காரணமாக அமைகிறது.

இந்த ஆய்வு முடிவுகளில் படி பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை வழக்கமாக சாப்பிடுபவர்கள் இளம் வயதிலேயே இறப்பதற்கான வாய்ப்பை 13% அதிகரிப்பதாக தெரிவிக்கிறது. மேலும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படும் இனிப்பு பானங்களை உண்பவர்களின் இறப்பு விகிதம் 9% அதிகரிப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை வழக்கமாக உட்கொள்பவர்களின் இறப்பு விகிதம் 4% அதிகரிக்கிறது எனவும் இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

இந்த ஆய்வுகளின் போது ஆராய்ச்சியாளர்கள் 34 ஆண்டுகளில் 48,193 இறப்புகளைக் கண்டறிந்துள்ளனர். இதில், 13,557 இறப்புகள் புற்றுநோயாலும், 11,416 இறப்புகள் இதய நோயாலும், 3,926 இறப்புகள் சுவாசக் கோளாறுகளாலும், 6,343 இறப்புகள் நரம்பியல் நோய்களாலும் ஏற்பட்டுள்ளன.

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொள்வது உடல் நலத்திற்கு தீங்கு உள்ள இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். துரித உணவுகளான பதப்படுத்தப்பட்ட இறைச்சி இனிப்பு பானங்கள் மற்றும் இனிப்பு உணவுகள் ஆகியவை இறப்பிற்கான வாய்ப்பை அதிகரிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உங்களது உணவு சாப்பிடும் பழக்கத்தை கட்டுப்பாடுடன் வைத்துக் கொள்வது நல்லது இலவசம் கூடி இருக்கின்றனர்.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பதப்படுத்தப்பட்ட ஒரு சில உணவுகளை தவிர்ப்பதன் மூலம் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடனும் நலமுடனும் வாழலாம் என்பதை தெரிவிக்கிறது. தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் வகைப்பாட்டை மேம்படுத்துவதற்கும் இந்த கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்துவதற்கும் எதிர்கால ஆய்வுகள் உத்தரவாதம் அளிக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மனிதனின் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் இதன்முறை விளைவுகள் பற்றி இதற்கு முன்பும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் இந்திர பதப்படுத்தப்பட்ட உணவுகளால் நாள்பட்ட அழற்சி, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி ஆகிய ஆபத்துகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்

Read More: “இனி ‘X’ சமூக வலைதளத்திலும் திரைப்படங்கள், வெப் சீரிஸ் பார்க்கலாம்..” ‘Elon Musk’ அசத்தலான அறிவிப்பு.!!

Advertisement