10 வயசு கம்மியா தெரியனுமா? அப்போ இனி கெமிக்கல் இல்லாத இந்த ஹேர் டை பயன்படுத்துங்க..
சிறு வயதிலேயே பலருக்கு முடி நரைத்து விடுகிறது. இதற்க்கு மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பல காரணங்கள் உண்டு. இதற்காக பலர் கடையில் விற்கும் டை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் நாம் வீட்டில் தயாரிக்கும் பொருள்களை வைத்து நமது கூந்தலை கருமையாக்குவது தான் நமது உடலுக்கும், முடிக்கும் நல்லது.
இதை தயாரிக்க, முதலில் கால் கைப்பிடி துளசி இலையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல் 10 முதல் 15 புதினா இலைகளில் இருந்தும் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், மூன்று தேக்கரண்டி மருதாணி பொடி, ஒரு தேக்கரண்டி வெந்தயப் பொடி, ஒரு தேக்கரண்டி காபி பொடி மற்றும் இரண்டு தேக்கரண்டி தயிர் மற்றும் இரண்டு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடியை எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது, ஒரு இரும்பு வாணலியை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் பொடிகள் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். பிறகு அரைத்து வைத்துள்ள துளசி சாறு ,மற்றும் புதினா சாறை சேர்த்து நன்கு கலக்கி விடுங்கள். பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை சிறிது தண்ணீர் ஊற்றி சூடாக்கி, பின்னர் மருதாணி கலவை உள்ள பாத்திரத்தை அடுப்பில் இருக்கின்ற பாத்திரத்தில் வைத்து டபுள் பாய்லிங் மெத்தடில் சூடாக்கவும்.
பத்து நிமிடங்களுக்கு மிதமான தீயில் சூடாக்கி, பின்னர் ஒரு இரவு முழுவதும் ஆறவிடவும். மறுநாள் இந்த ஹேர் பேக்கை தலை முழுவதும் அப்ளை செய்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து கழுவினால் வெள்ளை முடி அனைத்தும் கருமையாகும். இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு இருமுறை பயன்படுத்த வேண்டும்.
Read more: குளிர்காலத்தில் ஒருபோதும் சாப்பிடவே கூடாத 7 உணவுகள்… பல பிரச்சனைகள் வரலாம்..