அடிக்கடி ஓட்டல் உணவுகளை சாப்பிடுறீங்களா..? என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..? எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!
தொழில்நுட்பம் வளர வளர பல்வேறு துறைகளில் பல்வேறு மாற்றங்களை நாம் சந்தித்து வருகிறோம். அந்த வகையில், மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான உணவு சம்பந்தப்பட்ட விஷயத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது பொதுமக்கள் பல்வேறு உணவு முறைகளால் நோய்களுக்கு தள்ளப்பட்டு சராசரி மனிதனின் ஆயுட்காலமும் 70ல் இருந்து குறைந்து வருகிறது. ஆனால், மேலும் 40 வயதை தொடும்போது ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற பல நோய்களுக்கு இன்றைய தலைமுறையினர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர், அதற்கு காரணம் உணவுகள்தான்.
தற்போது உள்ள சூழ்நிலையில் உணவு பழக்கவழக்கத்தை பொறுத்தவரை சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ளவர்களில் பாதிக்கு பாதி பேர் தினமும் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஓட்டலில் சாப்பிடும் பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். மேலும் வேலைக்காக ரூம் எடுத்து தங்கி உள்ளவர்கள், திருமணம் ஆகாதவர்கள், வெளி ஊர்களில் இருந்து வந்தவர்கள் என பலரும் ஓட்டல்களையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஒரு காலகட்டத்தில் குறிப்பிட்ட ஓட்டல்களை நம்பி பொதுமக்கள் சென்று சாப்பிட்டு வந்தனர்.
குறிப்பாக அசைவ ஓட்டல்களின் நிலை தற்போது வேறு மாதிரியாக உள்ளது. ஒரு ஓட்டலுக்குள் செல்லும்போது ரிசப்ஷன் மற்றும் சாப்பிடும் இடம் உள்ளவற்றை சுத்தமாக பராமரிக்கும் அவர்கள் நான்வெஜ் சமைக்கப்படும் இடத்திற்கு சென்று பார்த்தால் அந்த ஓட்டலில் சாப்பிட ஒருவர் கூட மீண்டும் அந்த ஓட்டலுக்கு செல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகவும் மோசமாக உள்ளது. அசைவ உணவு வகைகளை பொறுத்தவரை சமைக்காத உணவுகளை நன்கு பதப்படுத்தப்பட்ட முறையில் பதப்படுத்தி அதனை பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால் அந்த வழிகாட்டி நெறிமுறைகளை யாரும் முறையாக பின்பற்றுவது கிடையாது.
பெரும்பாலான ஓட்டல்களில் சுத்தமான நெய், சுத்தமான எண்ணெய் எனக் கூறுகிறார்கள். ஆனால் டால்டா, பாமாயிலை பயன்படுத்துகிறார்கள். பாமாயில் மற்றும் டால்டா அதிகம் பயன்படுத்துவதால் ரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது. ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும், ஆனால் இரண்டு இடங்களில் அடைப்பு ஏற்படும்போது அது மரணத்தை தோற்றுவிக்கிறது.
குறிப்பாக மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படும்போதும் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும் போதும் மரணம் ஏற்படுகிறது. மேலும் பெரிய ஓட்டலில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களை வாங்கி சிறிய ஓட்டல்களில் மீண்டும் பயன்படுத்துகின்றனர். எனவே, முடிந்தவரை இரவு நேரங்களில் அசைவ உணவுகளை உண்பதை மக்கள் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை இரவு ஏழு மணிக்குள் சாப்பிட்டு முடித்து விட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Read More : நீங்க இந்த மாதிரி உடலுறவில் ஈடுபடுறீங்களா..? தொற்று நோய் பரவும் அபாயம்..!! இனி இதை ஃபாலோ பண்ணுங்க..!!