கேஸ் சிலிண்டர் வைத்திருப்போருக்கு சிக்கல்..!! உடனே ஸ்டாக் வாங்கி வெச்சிக்கோங்க..!!
தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்யும், அனைத்து சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில் அக்.26ஆம் தேதி வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைவருக்கும் போதுமான கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்கள், டெலிவரி செய்பவர்கள், மெக்கானிக்குகள், டிரைவர்கள், கிடங்கு பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் என அனைத்து தொழிலாளர்களுக்கும் சட்டப்படி நிர்ணயித்த குறைந்தபட்ச தொகையாவது வழங்க வேண்டும் என்றும், இந்த ஊதியமும் உயர்த்தப்பட வேண்டும், தீபாவளி போன்ற சிறப்பு பண்டிகைகளுக்கு போனஸ் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் ஊதிய விடுமுறை வேண்டும் என்றும் வரும் அக்.26ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அனைத்து எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன் யூனியன் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில தலைவர் சிவக்குமார், துணைப் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ”கேஸ் சிலிண்டர் வழங்கும் நிறுவனங்கள் தொழிலாளர்களை நியாயமாக நடத்துவதில்லை. ஏஜென்சிகள் சில தொழிலாளர்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்குகின்றன. மற்றவர்களைப் புறக்கணிக்கின்றன. இது சரியல்ல. பல தொழிலாளர்களுக்கு சீருடைகள் மட்டும் கொடுத்துவிட்டு முறையான சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுகின்றனர். இதனால் தொழிலாளர்களின் உழைப்பு வீணாகிறது.
இந்நிலையில், வரும் 26ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்து போராட்டம் நடத்தவுள்ளனர். அதன் பிறகும் எதுவும் மாறவில்லை என்றால், அவர்கள் நியாயமாக நடத்தப்படும் வரை வேலைநிறுத்தம் செய்வார்கள். இம்மாதம் தீபாவளி பண்டிகை வருவதால், விநியோகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மக்களை கவலையடையச் செய்துள்ளது.
ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் அக்.26ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அன்றைய தினத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி இருக்காது. இது வணிக சிலிண்டர் மற்றும் வீட்டு கேஸ் சிலிண்டர் என இரண்டிற்கும் பொருந்தும். இந்த போராட்டத்தால் ஒரு சிலிண்டர் வைத்திருக்கும் மக்கள், திடீரென்று கேஸ் காலியானால் பாதிக்கப்படுவார்கள். மொத்தமாக, தமிழ்நாடு முழுவதும் 40,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.
Read More : ரெட் அலர்ட் எதிரொலி..!! சென்னைக்கு விரைந்த பேரிடர் மீட்புப் குழுக்கள்..!!