"தமிழ்லயா பேசுற.." காதை திருகி கையில் கொடுத்த ஆசிரியை.! கன்னத்தில் ஓங்கி அறைந்த தாய்.! தனியார் பள்ளியில் பரபரப்பு.!
தமிழில் பேசியதற்காக 10 வயது மாணவனின் காது கிழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கேசவன். இவரது மனைவி குகன்யா.
இந்த தம்பதியினரின் மகன் மனிஷ் மித்ரன். 10 வயதான சிறுவன் மித்ரன் ராயபுரத்தில் உள்ள தனியார் ஆங்கிலப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி மித்ரனின் பெற்றோருக்கு போன் செய்த பள்ளி நிர்வாகத்தினர் அவர்களது மகன் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குகன்யா உடனடியாக மருத்துவமனைக்கு கிளம்பி சென்றார்.
அங்கு சென்று பார்த்த போது மாணவனின் காது அருந்து தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து காதை ஒட்ட வைக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனடியாக தன்னுடைய மகனை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றினார் குகன்யா. அங்கு அறுவை சிகிச்சையின் மூலம் சிறுவனின் காது ஒட்ட வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விசாரித்ததில் தமிழில் பேசியதற்காக ஆசிரியை காதை பிடித்து திருகியதாகவும் அப்போது அவரது நகம் பட்டு மித்ரனின் காது ஜவ்வு அருந்ததாகவும் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் தாயார் ஆசிரியை கன்னத்தில் அடித்ததோடு அவர் மீது ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் மாணவனின் தாயார் தன்னை தாக்கியதாக ஆசிரியை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேலும் சிறுவனின் தாயார் மீது ஸ்டான்லி மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.