'Artificial Intellgence' தொழில்நுட்பத்தை தடை செய்யும் 25% நிறுவனங்கள்..!! 'ப்ரைவசி' குறைபாடுகள் காரணமா.? பரபரப்பு அறிக்கை.!
பிரைவசி மற்றும் டேட்டா பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் நான்கில் ஒரு பங்கு நிறுவனங்கள் ஜெனரேட்டிவ் 'AI' எனப்படும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை தடை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது . மேலும் பெரும்பாலான நிறுவனங்கள் பிரைவசி மற்றும் தகவல் பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக ஜெனரேட்டிவ் 'AI' தொழில்நுட்பத்தை கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்துவதாகவும் செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் 27% பேர் 'AI' தொழில் நுட்ப பயன்பாட்டை தற்காலிகமாக தடை செய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் சிஸ்கோ நிறுவனம் டேட்டா பிரைவசி தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வறிக்கையில் ஜெனரேட்டிவ் 'AI' பயன்படுத்துவதன் மூலம் அந்த நிறுவனங்களின் சட்ட மற்றும் அறிவு சார்ந்த உரிமைகளுக்கு 69% அபாயம் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. மேலும் நிறுவனத்தை பற்றிய முக்கிய தகவல்கள் பொதுமக்கள் மற்றும் போட்டி நிறுவனங்களுக்கு வெளிப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் 68 % இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பொது நிறுவனங்கள் இல்லாத பிற நிறுவனங்களின் தகவல்கள் ஜெனரேட்டிவ் 'AI' கருவிகளில் உள்ளீடு செய்யப்படுவதை 49% நிறுவனங்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றன. எனினும் 91% நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்களது தகவல்கள் AI கருவிகளில் முறையான நோக்கங்களுக்காக தரப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கிறது. இனி வரும் காலங்களில் தனியுரிமை சான்றிதழ்கள் இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களை வாங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என 98 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஜெனரேட்டிவ் 'AI' புதிய சவால்களை கொண்ட வேறுபட்ட தொழில்நுட்பமாக பார்க்கின்றன என சிஸ்கோவின் தலைமை சட்ட அதிகாரி தேவ் ஸ்டால்கோப் கூறியிருக்கிறார். மேலும் "இந்த தொழில்நுட்பம் தொடர்பாக பதில் அளித்தவர்களில் 90 சதவீதம் பேர் தகவல்கள் மற்றும் ஆபத்துக்களை எதிர் நோக்க 'GenAI' செயலிக்கு மேலும் பல சிறப்பு மிக்க தொழில்நுட்பம் அவசியமாகிறது என தெரிவித்து இருக்கின்றனர்.இங்குதான் சிந்தனைமிக்க நிர்வாகம் செயல்படுகிறது. வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பாதுகாப்பது அதைப் பொறுத்தது,” என்று கூறியிருக்கிறார் ஸ்டால்காப்.