முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாட்டை விட்டு தப்பியோடிய பிரதமர்..!! அமலுக்கு வந்தது ராணுவ ஆட்சி..!! வங்கதேசத்தில் பெரும் பரபரப்பு..!!

Bangladesh Prime Minister Sheikh Hasina resigned from her post. He also fled from Bangladesh.
04:13 PM Aug 05, 2024 IST | Chella
Advertisement

வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாகவே மிகப் பெரிய போராட்டங்கள் நடந்து வருகின்றன. சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராகவே முதலில் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து, இட ஒதுக்கீட்டைக் குறைத்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதனால், சற்று போராட்டம் ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் வெடித்துள்ளது.

Advertisement

இதனால் பல இடங்களில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. மாணவர்களுக்கும் ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதுவரை 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறைக்கு எதிராக போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளும் பலனளிக்கவில்லை. இட ஒதுக்கீடு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு வந்த போதிலும், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் வங்கதேசத்தை விட்டு அவர், தப்பியோடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், ஷேக் ஹசீனாவின் பிரதமர் அலுவலகத்தை சூறையாடினர். இதையடுத்து, வங்கதேச நாட்டில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்கும்படி ராணுவ தளபதி வாக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கலவரங்களால் பலரும் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் போராட்டக்காரர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்ய அவசியம் ஏற்படவில்லை. பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ராணுவத்தினருடன் கலந்தாலோசனை நடத்தினர். நாட்டில் சட்டம் - ஒழுங்கை ராணுவம் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக ராணுவ தளபதி வாக்கர் தெரிவித்துள்ளார்.

Read More : இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யுமாம்..!! இந்த லிஸ்ட்டில் உங்க மாவட்டமும் இருக்கான்னு பாருங்க..!!

Tags :
armybangladesh
Advertisement
Next Article