ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி!. பிரேசிலில் உற்சாக வரவேற்பு!
PM Modi: ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
நைஜீரியாவுக்கு தனது முதல் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவம்பர் 18) பிரேசில் சென்றடைந்தார். இங்கு நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். பிரேசிலில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள 19வது ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பிரேசிலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரேசில் சென்றடைந்த பின்னர், பிரதமர் மோடி தனது சமூக வலைதளங்களில், "ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ சென்றடைந்துள்ளேன். இந்த உச்சிமாநாடு பல்வேறு உலகத் தலைவர்களுடன் அர்த்தமுள்ள உரையாடலாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா ஜி 20 முக்கோணத்தின் ஒரு பகுதியாகும். மேலும் தற்போது நடைபெற்று வரும் G20 உச்சிமாநாட்டு விவாதங்களில் தீவிரமாக பங்களித்து வருகிறது. இந்த உச்சி மாநாட்டில் உலக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி முன்வைப்பார். ஜி20 மாநாட்டின் போது, பிரதமர் பல தலைவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நைஜீரிய அதிபர் போலா டினுபு, பிரதமர் மோடிக்கு நைஜீரியாவின் உயரிய கவுரவமான 'தி கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர்' (ஜிகான்) விருது வழங்கி கவுரவித்தார்.
Readmore: மனிதர்களின் குடலில் 2வது மூளை இருக்கிறதா?. ஆச்சரியமான தகவல்!. உண்மை என்ன?