கனடாவில் குடியுரிமை பெற இந்திய பெண்கள் பலே திட்டம்..!! நிரம்பி வழியும் பிரசவ வார்டுகள்..!! இளைஞர் போட்ட புது குண்டு..!!
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், கனடாவை சேர்ந்த ஒருவர் சர்ச்சை கருத்தைக் கூறியிருக்கிறார். இந்தியப் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள மட்டுமே கனடா வருவதாகவும், இதனால் கனடா நாட்டு மக்களின் வரிப்பணம் வீணாவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இந்தியா - கனடா இடையே கடந்த சில காலமாகவே மோசமான உறவே நிலவி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொல்லப்பட்ட நிலையில், அதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா பிரதமர் ட்ரூடோ ஆதாரமின்றி கூறியதே இந்த மோதலுக்குக் காரணம். அதன் பிறகு இரு தரப்புக்கும் மோதல் இருந்த நிலையில், தூதர்களைக் கூட இந்தியா திரும்பப் பெற்றுக் கொண்டது.
இதற்கிடையே, கனடாவைச் சேர்ந்த சாட் ஈரோஸ் என்பவர் இந்தியப் பெண்கள் குறித்து சில சர்ச்சை கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அதாவது, கருவுற்று இருக்கும் இந்தியப் பெண்கள் பிரசவத்திற்காக மட்டுமே கனடாவுக்கு வருவதாக கூறியுள்ளார். கனடாவில் குழந்தை பெற்றுக் கொள்ளும் அவர்கள், குடியுரிமை பெற இதைப் பயன்படுத்திக் கொள்வதாகவும், பிறகு குடும்பத்தினரை மொத்தமாக அழைத்து வருவதாக அவர் கூறியிருக்கிறார்.
கனடாவில் உள்ள பிரசவ வார்டுகள் கனடா வந்த இந்தியப் பெண்களால் நிரம்பி இருப்பதாக ஒரு செவிலியர் தனது உறவினரிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கனடாவில் அனைவருக்கும் சமமான சிகிச்சை தரப்பட வேண்டும் என்றாலும் இந்தியப் பெண்கள் அதிக இடங்களை எடுத்துக் கொள்வது போல இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
என்ன லாபம்..? அவர்கள் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் பிரசவத்திற்கு பில் கட்ட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இதில் அவர்களுக்கு என்ன லாபம் எனக் கேட்கிறீர்களா..? கனடாவில் பிறப்பதால் அந்த குழந்தை கனடா குடியுரிமை பெறுகிறது. அந்த குழந்தை வளர்ந்த பிறகு கனடாவுக்கு வருகிறது. சீக்கிரமே பெற்றோர் உட்பட குடும்பத்தையே ஸ்பான்சர் செய்து கூட்டி வந்துவிடுகிறார்கள். கனடா நாட்டவர் கட்டும் வரியில் பிறகு அவர்கள் இங்கேயே இருந்துவிடுகிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.