அமலுக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டங்கள்.! ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்.! பரபரப்பு தகவல்கள்.!
இந்தியாவில் நடைமுறையில் இருந்து வந்த ஐபிசி சிஆர்பிசி மற்றும் எவிடன்ஸ் ஆக்ட் ஆகிய சட்டங்கள் இன்றிலிருந்து மாற்றப்பட்டு இருக்கிறது. இவற்றிற்கான ஒப்புதலும் குடியரசு தலைவரிடம் பெறப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான சட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உள்ள சட்டங்களை சில திருத்தங்கள் செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்படும் என கடந்த ஆகஸ்ட் மாதம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்ட பின் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் 1872 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட எவிடன்ஸ் ஆக்ட் இனி பாரதிய சாசிய சன்ஹிதா என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும் 1898 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிஆர்பிசி சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா என்று மாற்றப்பட்டிருக்கிறது. 1860 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐ பி சி செக்சன் தற்போது பாரதிய சுரக்ஷா சன்ஹிதா என்று மாற்றப்பட்டுள்ளது.