சூடுபிடிக்கும் திருப்பதி லட்டு விவகாரம்..!! மாட்டு கொழுப்பை கலந்தது எப்படி..? தயாரிப்பது யார் தெரியுமா..?
திருப்பதி லட்டு என்பது திருப்பதியில் உள்ள திருமலா வெங்கடேஸ்வரா கோயிலில் வெங்கடேஸ்வரருக்கு நைவேத்தியமாக வழங்கப்படும் லட்டு ஆகும். தரிசனம் செய்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானத்தின் கோயில் வாரியத்தால் 'பொடு' என்று அழைக்கப்படும் கோயில் சமையலறையில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் மட்டுமே அதைத் தயாரித்து விற்க உரிமை உள்ளது.
இந்த லட்டை அனைவராலும் அவ்வளவு எளிதாக தயாரிக்க முடியாது. அதற்கு காப்பி ரைட் உள்ளது. அதோடு இந்த லட்டை தயாரிக்க நிறைய தகுதிகள் உள்ளன. வைஷ்ண பிராமணர்கள் மட்டும் இதை தயாரிக்க விண்ணப்பிக்க முடியும். அதுவும், லட்டு தயாரிக்க முறையான பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஆகம விதிப்படி பயிற்சி எடுத்தவர்கள் மட்டுமே இதை தயாரிக்க விண்ணப்பிக்க முடியும். இது போக இவர்களுக்கு 25,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
இவர்கள் வெளியே எல்லாம் லட்டு தயாரிக்க முடியாது. கோவில் உள்ளே மட்டுமே தயாரிக்க முடியும். லட்டுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக, வரலாற்றில் 6 முறை மட்டுமே இந்த திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது உள்ள பொருட்களில் கிராம் மாவு, முந்திரி, ஏலக்காய், நெய், சர்க்கரை, சர்க்கரை மிட்டாய் மற்றும் திராட்சை ஆகியவை அடங்கும். இந்நிலையில் தான், திருப்பதி லட்டில் பயன்படுத்தப்பட்ட நெய்யில்தான் மாட்டுக்கொழுப்பு இருப்பதாக கடுமையான புகார்கள் வைக்கப்பட்டுள்ளன.
திருப்பதி கோவிலில் தயாரிக்கப்பட்ட லட்டுகள் மீதான சோதனை முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மொத்தம் 5 சாம்பிள் எடுத்துள்ளனர். இவற்றில் "வெளிப்புற" கொழுப்பு இருப்பதாக புகார்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் கொழுப்பு மதிப்பு எஸ் மதிப்பு என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இந்த 5 மதிப்புகளில் 2 மற்றும் 3வது சாம்பிள்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எஸ் மதிப்பு கூடுதலாக உள்ளது. மற்றவர்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைவாக உள்ளது. இப்படி குறைவாகவோ, கூடுதலாகவோ இருந்தால், அதில் வேறு ஒரு கொழுப்பு உள்ளது என்று அர்த்தம்.
சாம்பிள் ஒன்றில் சோயா, சூரியகாந்தி, ஆலிவ், ராப் விதை, லிப் விதை, கோதுமை, மக்காச்சோளம், பருத்தி விதை, மீன் எண்ணெய், கொழுப்பு இருக்கலாம். சாம்பிள் இரண்டில், தேங்காய் மற்றும் பனை கருப்பட்டி கொழுப்பு. சாம்பிள் மூன்றில் பாம் எண்ணெய் மற்றும் மாட்டிறைச்சி சாம்பிள் இருக்கலாம். 4-வாது சாம்பிளில் பன்றிக்கொழுப்பு இருந்திருக்கலாம். இவற்றில் எதுவாகவும் இருக்கலாம்.
எதிலும் உறுதியாக முடிவு சொல்லப்படவில்லை. மீன் எண்ணெய் அல்லது மாட்டுக் கொழுப்புதான் என்று சொல்ல முடியாது. முக்கியமாக standard s value- வரம்பு வைத்து ஒரு முடிவிற்கு வர முடியாது. பசு மாட்டை தவிர வேறு மாட்டின் நெய்யை பயன்படுத்தினாலும், மாட்டிற்கு அதீத தீவனம் கொடுத்தால் அல்லது மாட்டிற்கு மிக குறைவாக தீவனம் கொடுத்தால் கூட அதன் நெய்யில் இருக்கும் கொழுப்பு இந்த மாதிரி தவறான எஸ் மதிப்புகளை காட்ட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
Read More : ’முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’..!! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு..!! மக்களே உடனே முந்துங்க..!!