'சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் ஆளுங்கட்சி முன்னிலை..!' மீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரேம்சிங் தமாங்!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதே சமயத்தில் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல்கள் நடைபெற்றது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட உள்ளது. இதில் 60 தொகுதிகள் கொண்ட அருணாச்சலப் பிரதேசம் மற்றும் 32 தொகுதிகள் கொண்ட சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளுக்கு பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கியது. 32 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சிக்கிம் மாநிலத்தில் பிரேம்சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆளும் கட்சியாக இருந்து வருகிறது.
இந்த தேர்தல் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, சிக்கிம் ஜனநாயக முன்னணி, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களத்தில் உள்ளன. 32 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 17 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த நிலையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 29 தொகுதிகளிலும், சிக்கிம் ஜனநாயக முன்னணி 1 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. தற்போதைய முன்னிலை நிலவரப்படி மீண்டும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியே ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
Read more ; ‘வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முகவர்கள் இதை செய்ய வேண்டும்!’ – Xல் CM ஸ்டாலின் போட்ட அதிரடி பதிவு!