முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மறைமுகமாக விஜய்யை எச்சரித்த பிரேமலதா..!! இதை கவனிச்சீங்களா..? பயம் வந்துருச்சாமே..!!

In other words, Premalatha Vijayakanth had warned that Captain should not be used in any film with AI technology without proper permission. Everyone understood that this was an implicit warning to Kod.
10:02 AM Jul 10, 2024 IST | Chella
Advertisement

தவெக தலைவர் விஜய், தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இருந்தாலும், கோட் படத்திற்கு பிறகு தளபதி 69 படத்தை முடித்துக் கொடுத்து விட வேண்டும் என்பதிலும் தீவிரமாக உள்ளார். அதற்கான வேலைகள் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், கோட் பட ரிலீஸுக்கான இறுதி கட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரேமலதா சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கை கடும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

அதாவது முறையான அனுமதி இல்லாமல் கேப்டனை AI டெக்னாலஜி மூலம் எந்த படத்திலும் பயன்படுத்தக் கூடாது என அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இது கோட் படத்திற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கை என்பது அனைவருக்குமே புரிந்தது. ஏனென்றால், அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜயகாந்த் ஏஐ டெக்னாலஜி மூலம் வர இருப்பதாக சில மாதங்களாகவே தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. அதிலும், அந்த காட்சி படத்திற்கான மிக முக்கிய காட்சி என்பதும் கூடுதல் தகவல்.

ஆனால், தற்போது பிரேமலதா விஜயகாந்த் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருப்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால், கோட் படத்தில் விஜயகாந்த் வருவாரா மாட்டாரா என்ற சந்தேகமும் இருக்கிறது. இதற்கெல்லாம் பின்னணி காரணம் என்ன என்று பார்க்கையில் அது விஜய் மட்டும் தான். ஏனென்றால், கேப்டன் உடல் நலம் சரியில்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தபோது ரஜினி உட்பட பலரும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

ஆனால், விஜய் ஒருமுறை கூட விஜயகாந்தை சென்று பார்க்கவில்லை. இதை கேப்டனின் மூத்த மகன் விஜய பிரபாகரன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். நான் விஜய்யை அப்பா இறந்த போது தான் நேரில் பார்த்தேன் என எதார்த்தமாக அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இதன் மூலம் விஜய் கேப்டனை வந்து பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அதே சமயம் விஜயகாந்த் இறந்த அன்று அவர் அவ்வளவு கூட்டத்திற்கு நடுவில் பார்க்க வந்தது கூட ஒரு அரசியல் தான்.

அதேபோல் கோட் படத்தில் கேப்டனை பயன்படுத்துவதும் அரசியல் தான். இதையெல்லாம் கண்டு கொண்ட பிரேமதா, அது நடக்கக்கூடாது என இப்படி ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார். ஏனென்றால், தற்போதைய நிலவரப்படி கேப்டன் கட்சியில் இருக்கும் பல பேர் விஜய் கட்சிக்கு மாறும் அபாயம் இருக்கிறதாம். அதை தடுப்பதற்காகவும் உயிரோடு இருக்கும்போது கேப்டனை வந்து விஜய் பார்க்கவில்லையே என்ற கோபத்தில் தான் பிரேமலதா இப்படி ஒரு விஷயத்தில் இறங்கியுள்ளார். இதை தளபதி எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read More : உஷார்..!! சிறுவர், சிறுமிகளை பலாத்காரம் செய்து வீடியோ..!! இணையத்தில் வெளியிட்டு பணம் சம்பாதித்த இளைஞர்..!!

Tags :
கோட் திரைப்படம்சினிமா செய்திகள்தவெக தலைவர் விஜய்பிரேமலதா விஜயகாந்த்
Advertisement
Next Article