For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"பெண் மருத்துவர்கள் சிகிச்சையால் இறப்பு விகிதம் குறைகிறது…" வெளியான ஆய்வு முடிவுகள்.!!

07:10 AM Apr 25, 2024 IST | Mohisha
 பெண் மருத்துவர்கள் சிகிச்சையால் இறப்பு விகிதம் குறைகிறது…  வெளியான ஆய்வு முடிவுகள்
Advertisement

பெண் மருத்துவர்கள் சிஜே அளிக்கும்போது இறப்பு விகிதம் குறைவதோடு நோயாளிகள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின் என்ற இதழ் வெளியிட்ட ஆய்வு முடிவில் ஆண் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்படும் நோயாளிகளை விட பெண் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் நோயாளிகளுக்கு இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பெண் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகள் மீண்டும் அந்த நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது .

Advertisement

2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மருத்துவமனையில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 7,76,000 நோயாளிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. 318,800 ஆண் நோயாளிகளும் 458,100 பெண் நோயாளிகளும் இந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளனர். இவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வின் முடிவில் பெண் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்படும் போது இறப்பு விகிதம் மற்றும் நோயாளிகள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறைவதாக தெரிய வந்துள்ளது. பெண் மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்படும் பெண் நோயாளிகளின் இறப்பு விகிதம் 8.15% ஆக இருக்கிறது. அதேநேரம் ஆண் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்படும் பெண் நோயாளிகளின் இறப்பு விகிதம் 8.38% ஆக இருந்தது. இதேபோல் பெண் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்படும் ஆண் நோயாளிகளின் இறப்பு வீதம் 10.15% ஆக இருந்தது. ஆண் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்படும் ஆண் நோயாளிகளின் இறப்பு விகிதம் 10.23% ஆக இருந்தது.

ஆண் மருத்துவர்கள் மற்றும் பெண் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்படும் போது ஏற்படுகின்ற சதவீத வேறுபாடு அர்த்தமுள்ளதாக கருதப்படுகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். "பெண் மருத்துவர்கள் உயர்தர சிகிச்சையை வழங்குகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், எனவே, அதிகமான பெண் மருத்துவர்கள் இருப்பது சமூகக் கண்ணோட்டத்தில் நோயாளிகளுக்குப் பயனளிக்கிறது" என்று புலனாய்வாளர் யூசுகே சுகாவா ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

மருத்துவர்களின் பாலினம் நோயாளிகளை குணப்படுத்துவதில் எவ்வாறு முக்கிய பங்காற்றுகிறது என்பது பற்றியும் பெண் மருத்துவர்கள் இடம் சிகிச்சை பெறும் போது பெண் நோயாளிகளுக்கு அதிக பலன் கிடைப்பதற்கான காரணம் பற்றியும் ஆராய்ச்சி நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஆய்வுகளின் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சையின் போது கிடைக்கக்கூடிய பலனை அதிகரிக்கச் செய்வதற்கான முயற்சி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

பெண் மருத்துவர்கள் நோயாளிகளுடன் பேசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் நோயாளிகளின் தகவல்களை சரி பார்த்து அவற்றிற்கான சிகிச்சை நல்ல முறையில் வழங்குகிறார்கள். மேலும் பெண் மருத்துவர்களின் தகவல் தொடர்பு திறன் நன்றாக இருக்கிறது. ஒரு பெண் நோயாளி பெண் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது எழக்கூடிய சங்கடம், அசௌகரியம் மற்றும் சமூக மற்றும் கலாச்சார தடைகளைத் தணிக்க உதவுகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவத் துறைகளில் ஆண் மற்றும் பெண் மருத்துவர்களின் பராமரிப்பு முறைகளில் வேறுபாடுகள் இருப்பதை நாங்கள் அறிவோம். பெண் மருத்துவர்கள் நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிடுகிறார்கள் மற்றும் ஆண்களுடன் ஒப்பிடும்போது பகிரப்பட்ட மருத்துவ முடிவெடுப்பதிலும் கூட்டாண்மை விவாதங்களிலும் அதிக நேரம் செலவிடுகிறார்கள்,'' என ஆய்வின் இணை ஆசிரியரும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரும் மருத்துவ இயக்குநருமான டாக்டர் லிசா ரோடென்ஸ்டீன் மெடிக்கல் நியூஸ் டுடேவிடம் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவர்கள் ஆண்கள் மற்றும் வெள்ளை இனத்தவர்களை விட மோசமான சிகிச்சை பெறுகின்றனர் என ஜனவரி 2024 இல் JAMA இன்டர்னல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவில் தெரிவித்து இருக்கிறது. பெண்கள் மற்றும் சிறுபான்மை நோயாளிகள் வெள்ளை ஆண்களை விட 30% வரை தவறாக கண்டறியப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்று NBC செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பெண் மருத்துவர் சராசரியாக ஒரு நோயாளிக்கு 23 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறார். ஆனால் ஆண் மருத்துவர் ஒரு நோயாளிக்கு 21 நிமிடங்களே எடுத்துக் கொள்கிறார் என வேறு ஒரு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது.

Read More: Indonesia | உதயமாகும் புதிய சகாப்தம்.!! இந்தோனேசியா அதிபராக அறிவிக்கப்பட்ட பிரபோவோ சுபியாண்டோ.!!

Advertisement