முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Solar Storm | பூமியை தாக்கிய சூரிய புயல்.!! வானில் நிகழ்த்திய மாயாஜாலம்.!! முழு விபரங்கள்.!!

05:01 PM May 11, 2024 IST | Mohisha
Advertisement

தீவிரமான சூரிய புயல்(Solar Storm) பூமியை தாக்கி இருக்கிறது. அதன் ஆற்றல் பூமியின் சக்தி மற்றும் தகவல் தொடர்புகளை சீர்குலைக்கும் அபாயம் குறித்த கவலைகளை எழுப்பி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

வணக்கத்திற்கு மாறான வலுவான சூரிய புயல் டாஸ்மேனியாவிலிருந்து பிரிட்டன் வரை மற்றும் கனடாவில் இருந்து அமெரிக்கா வரை வீசியது. இந்த சூரிய புயல் வானத்தில் கண்கவர் ஒளிக் காட்சிகளை உருவாக்கியது. இந்த வழக்கத்திற்கும் மாறான காட்சி அப்பகுதியில் உள்ளவர்களால் பார்க்கப்பட்டது .

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) சூரிய வெடிப்பு பூமியை அடைந்த பிறகு அரிதான புவி காந்த புயல்(Solar Storm) உருவாகும் என எச்சரிக்கையும் இடத்தில் இருந்தது. இந்நிலையில் அந்த நிகழ்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நேரத்திற்கு முன்பாகவே நிகழ்ந்தது. இந்தப் புயலின் தாக்கம் வாரத்தின் இறுதி நாட்கள் முதல் அடுத்த வாரம் முறை நீடிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மின் உற்பத்தி நிலைய ஆபரேட்டர்களுக்கும் விண்வெளியின் சுற்றுப்பாதையில் உள்ள விண்கலங்களை இயக்குபவர்களுக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபெடரல் எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் ஏஜென்சி எச்சரிக்கை விடுத்தது. மேலும் இந்த நிகழ்வு தொடர்பாக பூமியில் உள்ளவர்களுக்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தேவையில்லை என NOAA விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையத்தின் விஞ்ஞானி ராப் ஸ்டீன்பர்க் தெரிவித்தார்.

ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் ஹெர்ட்ஃபோர்ட் போன்ற பகுதிகளிலும் சூரிய புயலின் கண்கவர் காட்சிகள் காணப்பட்டது மேலும் ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்திலும் வடக்கு விளக்குதல் என்று அழைக்கப்படும் இந்த ஒளி காட்சியை பொதுமக்கள் ரசித்தனர். மேலும் இந்த நிகழ்வு தொடர்பான கண்கவர் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பல்வேறு பயனர்களால் பகிரப்பட்டது.

வீட்டின் தோட்டத்தில் இந்த ஒளி காட்சிகளை பார்ப்பதற்காக குழந்தைகளை எழுப்பியுள்ளோம் என இங்கிலாந்தின் ஹெர்ட்ஃபோர்டில் உள்ள இயன் மான்ஸ்ஃபீல்ட் என்பவர் ஏஎஃப்பி நிறுவனத்திடம் தெரிவித்தார். மேலும் இந்தக் காட்சிகளை வெறும் கண்களால் பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த சூரிய புயல் உயர் மின்னழுத்த டிரான்ஸ்மிஷன் லைன்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என NOAA விண்வெளி வானிலை முன்னறிவிப்பாளர் ஷான் டால் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் இவை வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவித்தார். இவற்றால் செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படும் என தெரிவித்த அவர் சூரிய புயல் பூமியில் வழிசெலுத்தல் மற்றும் தகவல் தொடர்பு சேவைகளை சீர்குலைக்கும்.

இதுபோன்று கடந்த 2003 ஆம் ஆண்டு ஏற்பட்ட புவி காந்த புயல் ஸ்வீடன் நாட்டில் மின்சார பாதிப்பை ஏற்படுத்தியது மேலும் தென்னாப்பிரிக்காவில் இந்தப் புயலால் பல ட்ரான்ஸ்பார்மர் சேதம் அடைந்தது.

உட்புற உயிரியல் திசைகாட்டிகளைக் கொண்ட புறாக்கள் மற்றும் பிற இனங்கள் கூட பாதிக்கப்படலாம் என நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் நம்பிக்கை தெரிவிக்கிறது.புவி காந்தப் புயல்களின் போது பறவைகள் வீட்டிற்கு வருவது குறைவதை புறா வளர்ப்பவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த புவி காந்த புயல் 1859 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்தது. இந்த புயல் வானியலாளர் ரிச்சர்ட் கேரிங் டன் பெயரால் கேரிங்டன் நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது.

புதன்கிழமை முதல் சூரியன் வலுவான சூரிய எரிப்புகளை உருவாக்கியுள்ளது, இதன் விளைவாக குறைந்தது 7 பிளாஸ்மா வெடிப்புகள் ஏற்பட்டன. ஒவ்வொரு வெடிப்பும் ஒரு கொரோனல் மாஸ் எஜெக்ஷன் என அறியப்படுகிறது. ஒவ்வொரு மாஸ் எஜெக்ஷனும் டன் பிளாஸ்மா மற்றும் காந்தப்புலங்களை சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சூரியன் அதன் 11 ஆண்டு சுழற்சியின் உச்சத்தை நெருங்கும்போது சூரிய புயல் என்பது சூரிய செயல்பாட்டின் ஒரு பகுதியாகும் என NOAA ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த 7 விண்வெளி வீரர்களுக்கும் இந்தப் புயலால் ஆபத்து இல்லை என நாசா தெரிவித்துள்ளது.

Read More: “ஓய்வு பெற்ற அரசு ஊழியரான தந்தைக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் வசிக்கும் அரசு ஊழியர் HRA கோர முடியாது..” உச்ச நீதிமன்ற உத்தரவு.!!

Advertisement
Next Article