தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... பீதியில் மக்கள்..! ரிக்டர் அளவு 6.3 ஆக பதிவு...!
தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.
தைவானின் கிழக்கு மாகாணமான Hualien இல் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் 10 கிமீ (6.2 மைல்) ஆழத்தில் இருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் ஹுவாலியன் மற்றும் தைவானில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 14 பேர் இறந்தனர். தைவான் இரண்டு டெக்டோனிக் தகடுகளின் சந்திப்பிற்கு அருகில் உள்ளது. அடிக்கடி இந்த பகுதி பூகம்பங்களுக்கு உள்ளாகிறது. 2016 இல் தெற்கு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் 1999 இல் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.