For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”ஹமாஸ் தலைவரை கொன்றது நாங்கள்தான்”..!! பகிரங்கமாக அறிவித்த இஸ்ரேல்..!!

Israel has admitted for the first time that it killed the leader of Hamas.
02:42 PM Dec 24, 2024 IST | Chella
”ஹமாஸ் தலைவரை கொன்றது நாங்கள்தான்”     பகிரங்கமாக அறிவித்த இஸ்ரேல்
Advertisement

ஹமாஸ் அமைப்பின் தலைவரை கொன்றது தாங்கள்தான் என இஸ்ரேல் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. ஹவுத்தி கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியெ உள்ளிட்டோரை தாங்கள் தீர்த்துக் கட்டியதாகவும், அதேபோல், ஹவுத்தி தலைவர்களையும் ஒழிப்போம் என்றும் அமைச்சர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

Advertisement

ஈரானின் தற்காப்பு தொழில்நுட்பங்களை முறியடித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், சிரியாவில் ஆட்சியை கவிழ்த்திருப்பதாகவும் இந்த வரிசையில் ஹவுத்தி கிளர்ச்சிக்குழுவினர் உள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஹமாஸ் கிளர்ச்சிக்குழு தலைவர் கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது இஸ்ரேல் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.

Read More : 3 குழந்தைகளை பெற்றெடுத்த பின்பும் காதலனுடன் தகாத உறவு..!! இருவருக்கும் திருமணம் செய்து வைத்த கணவன்..!!

Tags :
Advertisement