"சென்னையில் மழைநீர் குறைந்தால் மட்டுமே மின் விநியோகம்"..!! மின்வாரியம் அறிவிப்பு..!!
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. புயலின் முன்பகுதி கரையை தொட்டுவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மரக்காணம் அருகே புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளதால், பலத்த காற்று வீசி வருகிறது. இந்த புயல் அடுத்த 3 – 4 மணி நேரத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி அருகே புயல் கரையை கடக்க உள்ளது.
இந்நிலையில், சென்னையில் மின்சார பெட்டி வரை தேங்கியுள்ள மழைநீர் குறைந்தால் மட்டுமே மின் விநியோகம் செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தியாகராய நகர், கோடம்பாக்கம், ஓஎம்ஆர் சாலைகளில் தண்ணீர் குறைந்தால் மட்டுமே மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும். அதேபோல், எங்கெல்லாம் தண்ணீர் வடிகிறதோ அங்கெல்லாம் உடனே மின்சாரம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Read More : கரையை கடக்கத் தொடங்கியது ஃபெஞ்சல் புயல்..!! 10 மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை..!!