For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நாளை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…

07:24 AM Dec 03, 2023 IST | 1Newsnation_Admin
நாளை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு   அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…
Advertisement

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிசம்பர் 3ஆம் தேதி) புயலாக உருவாகி, பிறகு டிசம்பர் 5ஆம் தேதி பிற்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடனுக்கும் எனவும், இந்த புயல் காரணமாக டிசம்பர் 4 மற்றும் 5ஆம் தேதி சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. குறிப்பாக நாளை (டிசம்பர் 4ஆம் தேதி) திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

புயல் காரணமாக சென்னை உட்பட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் நடைபெற்றுவரும் கட்டுமானப்பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அறிக்கை வெளியாகின. மேலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (டிசம்பர் 4ஆம் தேதி) நடைபெறவிருந்த இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், புயல் காரணமாக பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement