முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு..!! மீண்டும் எப்போது..? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

04:24 PM Dec 06, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வை ஒத்திவைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

முன்னதாக, மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் நாளை (டிசம்பர் 7) தொடங்க இருந்த அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தமிழ்நாடு முழுவதும் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதாவது தொடர்‌ மழையின்‌ காரணமாக, அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ மேல்நிலை வகுப்புகளுக்கான அரையாண்டுத்‌ தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணையில்‌ 11-12-2023 முதல்‌ குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில்‌ அதே பாடத்திற்கான தேர்வுகள்‌ நடைபெறும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.7, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் 14 மற்றும் 20ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருமழையால் வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாள் தயாரிப்பதில் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags :
அரையாண்டு தேர்வுபள்ளிக்கல்வித்துறைமாணவர்கள்
Advertisement
Next Article