For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அரசு வேலைக்காக மதம் மாறுவதா..? அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது..!! புதுச்சேரி பெண் வழக்கில் நடந்தது என்ன..?

If there is no true faith in another religion, it can never be accepted.
07:26 AM Nov 28, 2024 IST | Chella
அரசு வேலைக்காக மதம் மாறுவதா    அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது     புதுச்சேரி பெண் வழக்கில் நடந்தது என்ன
Advertisement

புதுச்சேரியை சேர்ந்தவர் சி.செல்​வ​ராணி. இவரது தந்தை இந்து ஆதிதிரா​விடர் வகுப்பைச் சேர்ந்​தவர். தாய் கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்​தவர். செல்​வ​ராணி தேவால​யத்தில் ஞானஸ்​நானம் பெற்​றவர். இந்நிலை​யில், புதுச்​சேரி அரசின் கிளார்க் பணியிடத்திற்கு பட்டியலின வகுப்​பைச் சேர்ந்​தவர் எனக்​கூறி விண்​ணப்​பித்து செல்வராணி தேர்ச்சி பெற்​றார்.

Advertisement

சாதிச் சான்​றிதழ் சரிபார்ப்​பின்​போது அவர் கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்​தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் தனக்கு தனது தந்தை வகுப்​பைச் சேர்ந்​தவர் என சாதி சான்​றிதழ் வழங்க வேண்டுமென விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரது விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இதை எதிர்த்து செல்வராணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தர். ஆனால், இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இடஒதுக்​கீட்டு சலுகைகளைப் பெறு​வதற்காக மதம் மாறுபவர்களுக்கு சாதிச் சான்​றிதழ் வழங்க முடி​யாது எனக்​கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசா​ரித்த சுப்ரீம் கோர்ட், ”ஒரு மதத்​தில் இருந்து மற்றொரு மதத்​துக்கு மாறுவது என்பது அதன் கொள்​கைகள் மற்றும் கோட்பாடுகளால் உண்மையாக ஈர்க்​கப்​பட்​டிருக்க வேண்​டும். ஆனால், உங்கள் நோக்கம் இடஒதுக்கீட்டின் பலனைப் பெறுவதற்கு மட்டுமே இருக்கிறது. பிற மதத்​தின் மீது உண்மையான நம்பிக்கை இல்லாமல் இருந்​தால், அதை ஒருபோதும் அனும​திக்க முடி​யாது.

இதுபோன்ற இடஒதுக்​கீட்டு கொள்​கை​யையே கேலிக்​கூத்​தாக்​கி​விடும். மனுதாரர் கிறிஸ்துவ மதத்தை தீவிரமாக கடைபிடிக்​கும்​போது, அரசு வேலை​வாய்ப்​புக்காக இந்துவாக தன்னை அடையாளப்​படுத்துவதை ஏற்க முடி​யாது. மேலும், அது அரசியலமைப்பு சட்டத்​தையே மோசடி செய்​வதற்கு சமமாகும். எனவே, இந்த வழக்​கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்து மனுதாரரின் வழக்கை தள்ளுபடி செய்தது.

Read More : வெள்ளி கொலுசை காலில் அணிவதால் இவ்வளவு நன்மைகளா..? பெண்களே இனியும் தவிர்க்காதீங்க..!!

Tags :
Advertisement