பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க முடியவில்லையா? அப்போ இத மட்டும் செஞ்சு பாருங்க..
பொதுவாக கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை அதிகரிப்பது இயல்பான ஒன்று தான். பிரசவத்திற்கு பின்னர், தூக்கமின்மை, நன்கு பால் சுரக்க வேண்டும் என்று அதிகம் சாப்பிடுவது போன்ற பல காரணங்களால் உடல் எடை பிரசவத்திற்கு பின் அதிகமாகி விடுகிறது. பொதுவாக, பிரசவதிற்குப் பின் 6 முதல் 20 கிலோ வரை உடல் எடை கூடுகிறது. அப்படி கூடிய எடையை குறைப்பது சுலபமான காரியம் இல்லை என்று பலர் கூறுவது உண்டு. ஆனால் அது உண்மை அல்ல. சரியான உணவை சரியான அளவில் எடுத்துக்கொண்டு, முறையான உடற்பயிற்சி செய்தால் கட்டாயம் குறைத்து விடலாம். அப்படி நீங்கள் கூடிய எடையைக் குறைப்பதற்காக உடற்பயிற்சி செய்ய விரும்பினால், பிரசவத்திற்குப் பின் ஒரு 6 முதல் 8 வார காலம் கழித்து தான் ஆரம்பிக்க வேண்டும்.
தாய்ப்பால் ஊட்டும் சமயம் சற்று அதிக கலோரி உடலுக்கு தேவைப்படுவதால் அப்போது உணவு கட்டுப்பாடு என்பது கூடாது. அதனால் நீங்கள் சிறிய மற்றும் எளிய உடற்பயிற்சிகளை தினமும் செய்வது நல்லது. பிரசவத்தின் போது, வயிற்றுத்தசைகள் சற்று வலுவிழந்து காணப்படும். இதனால் அவை வலுப்பெறும் வரை கடினமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம். மாறாக, கீழ்க்கண்ட எளிதான உடற்பயிற்சிகளை நீங்கள் செய்யலாம்: இடுப்பை வலுப்படுத்தும் பயிற்சி – pelvic floor exercises, வயிற்றை வலுவாக்கும் பயிற்சி – gentle stomach clenching exercises, விறுவிறு நடைப்பயிற்சி, யோகா, நீச்சல் பயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல். இது போன்ற சுலபமான பயிற்சிகளை நீங்கள் செய்வதால் உங்கள் எடை கட்டாயம் குறையும்.
பொதுவாக பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1200 கலோரி தேவை. பாலூட்டும் தாய்மார்களுக்கு 1800 கலோரிகள் அவசியம் தேவை. ஆரோக்கியமான எடை குறைப்பு என்பது ஒரு வாரத்திற்கு 0.450 கிராம் முதல் 0.680 கிராம் வரை இருத்தல் நலம். இதற்கு நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை உணவு உண்ணுவதை மாற்றி சிறுசிறு பகுதியாகப் பிரித்து 6 முறையாக உண்ணுதல் நலம். சிறுசிறு உணவுகள் என்றால் சாதம், தோசை போன்ற உணவுகளை சாப்பிடக் கூடாது. அதற்க்கு பதில், கேரட் துருவல், பழங்கள் மற்றும் பால் சத்து நிறைந்த பானங்கள்.
Read more: மாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்தால் உடல் எடை குறையுமா?? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்…