முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கடலுக்கு அடியில் தபால் பெட்டி..!! தினமும் 1000 தபால் அட்டைகள்..!! இது எங்க இருக்கு தெரியுமா..?

01:33 PM Apr 26, 2024 IST | Chella
Advertisement

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இந்த காலக்கட்டத்திலும் தபால் முறைக்கு என்று தனி அங்கீகாரம் இருந்து வருகிறது. உலகின் இன்னும் கடிதத்தை தபால் முறையின் மூலம் அனுப்பதற்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்வை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. அப்படி ஒன்றுதான் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கும் தபால் பெட்டி. இந்த பெட்டியில் உங்களுடைய கடிதத்தை கடலுக்கு அடியில் நீந்தி சென்றுதான் போடவேண்டும்.

Advertisement

கடலுக்கு அடியில் அமைந்திருக்கும் இந்த தபால் பெட்டி ஜாப்பானின் சுசாமி பே என்ற இடத்தில் உள்ளது. கரையில் இருந்து சுமார் 10 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த பெட்டியில், உங்களுடைய கடிதத்தை அடியில் நீந்தி சென்றுதான் போடவேண்டும். இதற்காகவே தண்ணீரால் பாதிக்காத தபால் அட்டைகள் தயாரிக்கப்படுகிறது. அந்த தபால் அட்டையில், ஆயில் பெயிட் மூலம் நீங்கள் எழுத விரும்புவதை எழுதி போட வேண்டும். இதற்காக பணிப்புரிபவர்கள் அதனை எடுத்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைப்பர்.

2002இல் இந்த தபால் பெட்டியின் தனித்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. ஒரு நாளுக்கு சுமார் 1000 முதல் 1,500 வரை தபால் அட்டைகள் இந்த பெட்டியில் போடப்படுவதாக சொல்லப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு சாகச பயணமாக, இந்த தபால் பெட்டி வரவேற்பை பெற்றது. இந்த தபால் பெட்டியை சார்ந்து, தபால் அட்டை உருவாக்குவது, இதற்கான ஆயில் பெயிட் விற்பனை என வணிக ரீதியாக சிறந்து விளங்குகிறது. நீருக்கு அடியில் இருந்து வரும் தபால் என்பதால் இதற்கான வரவேற்பு அதிகளவில் உள்ளது.

Read More : ’இது இருந்து என்ன புண்ணியம்’..? ’வருவாய் குறையுதே’..!! மூடப்படுகிறதா சார் பதிவாளர் அலுவலகம்..?

Advertisement
Next Article