"ரூ.5,000 போதும்.." 10 வருஷத்தில் 'ரூ.8,00,000' கையில் கிடைக்கும்..!! அஞ்சல் துறையின் சூப்பரான திட்டம்.!
தற்போது அஞ்சல் துறையால் நடத்தப்படும் சிறுசேமிப்பு திட்டங்கள் மக்களிடம் பிரபலமாகி வருகிறது. மேலும் இவை அரசு நிறுவனங்கள் என்பதால் முதலீடும் பாதுகாப்பானதாக இருப்பதோடு சேமிப்பிற்கான அதிக வட்டி வீதத்தையும் கொடுக்கிறது. இந்திய அஞ்சல் துறை சார்பாக நடத்தப்படும் தொடர் வைப்பு திட்டம் மக்களுக்கு அதிக லாபம் தரும் சிறந்த சேமிப்பு திட்டமாகும்.
மத்திய அரசு செப்டம்பர் 2023 ஆம் வருடம் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதன் மூலம் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு 6.5% ஆக இருந்த வட்டி விகிதம் .20 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு 6.7% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் சிறு சேமிப்பை தொடங்குவதன் மூலம் பயனர்கள் அதிக லாபம் பெற முடியும். இதனால் முன்பை விட அதிக முதலீடு செய்து நமது சேமிப்பு திட்டத்தின் முடிவில் அதிக முதிர்ச்சி தொகையை பெற முடியும்.
இந்த சேமிப்பு திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதம் அக்டோபர் 1 2023 முதல் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அஞ்சலக ஆர்டி சேமிப்புத் திட்டத்தில் இணைவதன் மூலம் 10 வருட முதிர்ச்சி காலத்தில் அதிக லாபம் பெறலாம். இந்த சேமிப்பு திட்டத்தில் 100 ரூபாய் முதலீட்டில் இருந்து உங்கள் கணக்கை தொடங்கலாம். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். எனினும் 3 ஆண்டுகள் கழித்து உங்கள் முதிர்வு தொகையை எடுத்துக் கொள்ளலாம்
இந்தத் திட்டத்தின் நீண்ட கால சேமிப்பில் வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம் இருக்கிறது. உதாரணமாக 5 வருடம் மாதம் 5000 ரூபாய் இந்த சேமிப்புத் திட்டத்திற்கு செலுத்தி வந்தால் ஐந்து வருடங்களின் முடிவில் உங்களது டெபாசிட் தொகை 3 லட்ச ரூபாயாக இருக்கும். இது 6.7% வட்டியுடன் சேர்த்து ரூ.3,56,830/- முதிர்வு தொகையாக உங்களுக்கு கிடைக்கும். இந்த சேமிப்பை மேலும் 5 வருடம் நீடிக்கும் போது நீங்கள் டெபாசிட் செய்த தொகை 6 லட்சமாகவும் உங்களது டெபாசிட்டிற்கான வட்டி ரூ.2,54,272 ஆக இருக்கும். 10 வருடம் முடிவில் ரூ.8,54,272/- உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் இந்தத் திட்டத்தில் கடன் பெறும் வசதியும் இருக்கிறது நீங்கள் டெபாசிட் செய்த தொகையிலிருந்து 50% உங்களுக்கு கடனாக வழங்கப்படும். ஆனால் இதற்கான வட்டி விகிதம் அதிகம். இந்தத் திட்டத்தில் இந்திய குடிமக்கள் அனைவரும் இணைந்து பயன்படலாம். அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று அஞ்சலக தொடர் வைப்பு நிதியில் சேர வேண்டும் என்று கூறினால் போதும். அதற்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து முறையான ஆவணங்களை சமர்ப்பித்தால் உங்களது கணக்கு துவங்கப்படும். இது போன்ற அரசு திட்டங்களில் இன்றே சேர்ந்து பயன் பெறுங்கள்.