ரூ.34 லட்சம் வருமானம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்..!! முதலீடு வெறும் ரூ.1,500 மட்டுமே..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!
இன்றைய காலகட்டத்தில் சேமிக்க விரும்பும் பலருக்கும் தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், சேமிக்க விரும்புபவர்களுக்காக போஸ்ட் ஆபிஸ் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, போஸ்ட் ஆபீஸில் உள்ள சிறப்பான சேமிப்பு திட்டம் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தபால் நிலையங்களில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தனித்தனியாக சேமிப்பு திட்டங்கள் உள்ளன. ஓய்வுக்கு பிறகு சிக்கல் இல்லாத வாழ்விற்காக சரியான வழியில் டெபாசிட் செய்வது அவசியமாகும். அந்த வகையில், போஸ்ட் ஆபிஸில் பிரபலமான சேமிப்பு திட்டமாக, கிராம சுரக்ஷா யோஜனா (Gram Suraksha Yojana) உள்ளது. இத்திட்டத்தில், 19 முதல் 55 வயது வரையில் உள்ளவர்கள் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு வாரியாக இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். பிரீமியம் செலுத்துவதற்கு கால அவகாசமாக 30 நாட்கள் கொடுக்கப்படும். பாலிசி காலத்தை தவறவிட்டாலும், மீதமுள்ள பிரீமியத்தை செலுத்தி பாலிசியை புதுப்பித்துக் கொள்ள முடியும். இத்திட்டத்தில் ஆண்டுக்கு ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் ரூ.65 போனஸ் வழங்கப்படும். ஒருவர் 19 வயதில் ரூ.10 லட்சத்துக்கு இத்திட்டத்தில் பாலிசி எடுத்தால், 55 ஆண்டுகளுக்கு பிரீமியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.1,515 செலுத்த வேண்டும். 58 ஆண்டுகளுக்கு ரூ.1,463, 60 ஆண்டுகளுக்கு ரூ.1,411 பிரீமியம் செலுத்த வேண்டும்.
இதன் மூலம் முதலீட்டாளர் 55 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகையாக ரூ.31.60 லட்சமும், 58 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.33.40 லட்சமும், 60 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.34.60 லட்சமும் முதலீட்டாளர்கள் பெற முடியும். இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு கடன் பெறும் வசதியும் உள்ளது.