ராணுவ பப்ளிக் பள்ளிகளில் ஆசிரியர் வேலை.. கை நிறைய சம்பளம்..!! தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..
ராணுவப் பப்ளிக் பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித்தகுதி :
* முதுகலை ஆசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுநிலைப்பட்டம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக B.Ed. படித்திருக்க வேண்டும்.
* பட்டதாரி ஆசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்டபாடத்தில் இளநிலைப் பட்டம் பட்டம் பெற்றிருப்பதுடன் B.Ed. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணிக்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் B.Ed. பட்டம் அல்லது 2 வருட ஆசிரியர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
* இப்பதவிகளுக்கு CET/TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு : ஆசிரியர் பணிக்கு பணி அனுபவம் இல்லாதவர்கள் 40 வயது இருக்க வேண்டும். 5 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவர்கள் என்றால் 54 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு நடைபெறும். அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம் விவரம் : சிபிஎஸ்இ விதிமுறைகளின்படி தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு நடைபெறும் தேதி : எழுத்துத் தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நவம்பர் 23,24,25 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.awesindia.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வுக்கான பாடத் திட்டம், மதிப்பெண் விவரங்கள், தேர்வு நேரம் இந்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
Read more ; சென்னையில் நாளை மின்சார ரயில்கள் ரத்து.. கடற்கரை- செங்கல்பட்டு இடையே ரயில்கள் ஓடாது..!!