For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ராணுவ பப்ளிக் பள்ளிகளில் ஆசிரியர் வேலை.. கை நிறைய சம்பளம்..!! தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

Post Graduate Teachers, Graduate Teachers and Primary School Teacher Posts are being filled in Army Public Schools.
11:05 AM Oct 26, 2024 IST | Mari Thangam
ராணுவ பப்ளிக் பள்ளிகளில் ஆசிரியர் வேலை   கை நிறைய சம்பளம்     தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
Advertisement

ராணுவப் பப்ளிக் பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

Advertisement

கல்வித்தகுதி : 

* முதுகலை ஆசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுநிலைப்பட்டம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக  B.Ed. படித்திருக்க வேண்டும்.

*  பட்டதாரி ஆசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்டபாடத்தில் இளநிலைப் பட்டம் பட்டம் பெற்றிருப்பதுடன் B.Ed. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணிக்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் B.Ed. பட்டம் அல்லது 2 வருட ஆசிரியர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பதவிகளுக்கு CET/TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு : ஆசிரியர் பணிக்கு பணி அனுபவம் இல்லாதவர்கள் 40 வயது இருக்க வேண்டும். 5 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவர்கள் என்றால் 54 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு நடைபெறும். அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம் விவரம் : சிபிஎஸ்இ விதிமுறைகளின்படி தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு நடைபெறும் தேதி : எழுத்துத் தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நவம்பர் 23,24,25 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.awesindia.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வுக்கான பாடத் திட்டம், மதிப்பெண் விவரங்கள், தேர்வு நேரம் இந்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

Read more ; சென்னையில் நாளை மின்சார ரயில்கள் ரத்து.. கடற்கரை- செங்கல்பட்டு இடையே ரயில்கள் ஓடாது..!!

Tags :
Advertisement