திடீரென முதல்வரை சந்தித்த பொன்முடி..!! அடுத்த பிளான் இதுதான்..!! வெளியான பரபரப்பு தகவல்..!!
சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொன்முடி, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, எம்.பி., எம்எல்ஏக்கள் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டாலே அவர்கள் தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். அந்த வகையில், பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை பொன்முடி இழந்துள்ளார்.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல், சட்டப்பேரவை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த தீர்ப்பை பரிசீலித்து, அமைச்சர் பதவி இழப்பு மற்றும் எம்எல்ஏ பதவி தகுதியிழப்பு குறித்து அரசிதழில் சட்டப்பேரவை செயலகம் அதிகாரபூர்வமாக வெளியிடும். இதற்கிடையே, திமுக துணைப்பொதுச்செயலாளராக உள்ள பொன்முடி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.