முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பொங்கல் பரிசு ரூ.1,000..!! கவலைப்படாதீங்க..!! உங்களுக்குத்தான் முன்னுரிமை..!! வெளியான அறிவிப்பு..!!

10:38 AM Jan 08, 2024 IST | 1newsnationuser6
Advertisement

பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்புடன் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு போன்றவற்றுடன் பணம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டும் பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதற்காக நேற்று காலை முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகத்தை தொடங்கினர். அந்த டோக்கனில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளனர். வரும் 10ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள 35,000 ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், பொங்கல் பரிசு விநியோகம் ரேஷன் கடைகளில் உள்ள விற்பனை முனைய கருவியில் கார்டுதாரரின் விரல் ரேகை சரிபார்ப்பு வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உணவு வழங்கல் துறை ஆணையர் ஹர் சஹாய் மீனா, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், “பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை ஜனவரி 10ஆம் தேதி முதல் துவக்க வேண்டும். தொடர்ந்து 14ஆம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும். வரும் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும். ரொக்க தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு விநியோகம் ரேஷன் கடைகளில் உள்ள விற்பனை முனைய கருவியில் கார்டுதாரரின் விரல் ரேகை சரிபார்ப்பு வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

விரல் ரேகை சரிவர தெளிவாக பதிய இயலாத கார்டுதாரர்களுக்கு மட்டும் அவர்கள் நேரில் வருகை தருவது உறுதி செய்யப்பட்டு பதிவேட்டில் கையொப்பம் பெற்று விநியோகம் செய்யப்படலாம். எக்காரணத்தை கொண்டும் அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாகவோ இதர நபர் வாயிலாகவோ பரிசு தொகை பெற அனுமதியில்லை. ரொக்க தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக வரும் மாற்றுத்திறனாளிகள் முதியவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
உரிமைத்தொகைதமிழ்நாடு அரசுபொங்கல் பண்டிகைபொங்கல் பரிசுரேஷன் கடைகள்
Advertisement
Next Article