வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! இந்த தேதியில் யாருக்கும் பணம் அனுப்ப முடியாது..!! டைம் நோட் பண்ணுங்க..!!
ஜூலை 13, 2024 அன்று தற்காலிகமாக UPI அமைப்புகள் வேலை செய்யாது என HDFC வங்கி அறிவித்துள்ளது.
ஜூலை 13ஆம் தேதி அன்று UPI சேவைகள் குறிப்பிட்ட இரண்டு நேரங்களில் கிடைக்காது என்பதை ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கூறியுள்ளது. அதாவது, அதிகாலை 3 மணி முதல் 3.45 வரையும், காலை 9.30 மணி முதல் மதியம் 12.45 வரையும் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன மாதிரியான சேவைகளில் தடை ஏற்படும்..?
நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகள் பயன்படுத்த முடியாது. கூடுதலாக IMP, NEFT, RTGS, HDFC வங்கியின் ஒரு அக்கவுண்டில் இருந்து மற்றொரு அக்கவுண்டிற்கு செய்யப்படும் ஆன்லைன் டிரான்ஸ்ஃபர்கள் மற்றும் கிளை ட்ரான்ஸ்ஃபர்கள் போன்ற அனைத்து நிதி மாற்று சேவைகளும் கிடைக்கப் பெறாது. வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக வங்கியானது, அதன் கோர் பேங்கிங் சிஸ்டத்தை (CBS) புதிய பிளாட்ஃபார்முக்கு மாற்றவுள்ளது.
இதன் மூலமாக வங்கி சேவைகளின் செயல்திறன் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தேவையில்லாத குழப்பங்களை தவிர்ப்பதற்காக இந்த மேம்பாட்டை வங்கி இரண்டாவது சனிக்கிழமை, அதாவது வங்கி விடுமுறையின் போது அட்டவணைப்படுத்தியுள்ளது. இதனால், பொருளாதாரம் சம்பந்தப்பட்ட செயல்பாட்டை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு வங்கி அறிவுறுத்தியுள்ளது.
HDFC வங்கியின் கிரெடிட் கார்டு விதியில் மாற்றம்.!!
CRED, Paytm, Cheq, MobiKwik மற்றும் Freecharge போன்ற பிளாட்ஃபார்ம்கள் மூலமாக செய்யப்படும் கிரெடிட் கார்டு வாடகை பேமெண்ட்களுக்கு புதிய கட்டணங்களை ஹெச்.டி.எஃப்.சி. வங்கி அறிவித்துள்ளது. இது வாடகை ட்ரான்ஸாக்ஷன்களுக்கு 1% கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து HDFC வங்கி வசூலிக்க உள்ளது. மேலும், ஒரு ட்ரான்ஷாக்ஷனில் அதிகபட்சமாக 3000 ரூபாய் மட்டுமே பேமெண்ட் செலுத்த முடியும். இந்த விதி ஆகஸ்ட் 1 2024 முதல் அமலுக்கு வருகிறது.
Read More : டெங்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக்கூடாது..? அறிகுறிகள் இதுதான்..!!