பொங்கல் வரப்போகுது.. வீட்டை சுத்தம் செய்தாச்சா..? டக்குனு வேலைய முடிக்க சில எளிய டிப்ஸ்..
தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் பண்டிகையான தைத் திருநாள் வந்தாலே அனைவருக்கும் மகிழ்ச்சியான சூழல் அமையக்கூடும். ஆண்களை விட பெண்களுக்கு பொங்கல் திருநாளில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். ஆனாலும் போகிப் பண்டிகைக்குள் வீட்டில் உள்ள பழைய பொருள்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்வது அவர்களின் மிகப்பெரிய வேலையாகவே அமையக்கூடும். இந்த பண்டிகைக் காலத்தில் வீடுகளை சுத்தம் செய்வதற்கு முன்னதாக இந்த டிப்ஸ்களை கொஞ்சம் படித்துக்கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
வீடுகளைச் சுத்தம் செய்ய உதவும் டிப்ஸ்கள்:
* ஒவ்வொரு பெண்களுக்கும் வீடுகளைச் சுத்தம் செய்வது பெரும் சவாலான ஒன்று. அதிலும் சமையல் அறையில் உள்ள பொருள்களை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு அதிகம் மெனக்கெடுவார்கள். இந்த பொங்கல் திருநாளில் கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட கண்ணாடி பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் சிறிதளவு நீரில் உப்பைக் கலந்துக்கொள்ளவும். பின்னர் அந்த உப்புக்கரைசலை ஒரு பேப்பரில் தொட்டு துடைக்கும் போது அனைத்துப் பொருங்களும் பளீச்சென்று மாறிவிடும்.
* சமையல் அறைக்கு அடுத்தப்படியாக பெண்கள் சுத்தமாக வைத்திருக்க நினைப்பது ஹால், பெட்ரூம் போன்ற இடங்களில் தான். அங்கு உள்ள ஸ்கிரீன் துணிகள், பெட் ஷூட்டுகள் போன்றவற்றை மாற்ற வேண்டும்.
* வீட்டில் உள்ள பூஜை அறைகளை நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இருந்தால் முதலில் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் விளக்குகளை ஊற வைக்கவும். பின்னர் சாமி படங்களை ஒவ்வொன்றாக எடுத்து தனித்தனியாக துடைத்து வைக்கவும்.
* ஜன்னல்கள் மற்றும் கதவுகளை சுத்தம் செய்ய வேண்டும். ஜன்னல் கண்ணாடிகளை துடைத்து, கதவுகளில் உள்ள தூசிகளை அகற்ற வேண்டும். இது வீட்டிற்குள் அதிக வெளிச்சம் வர உதவும்.
* வீட்டில் உள்ள திரைச்சீலைகள், பெட்ஷீட்கள், தலையணை உறைகள் போன்ற துணிகளை சுத்தம் செய்ய வேண்டும். அவற்றை துவைத்து அல்லது சலவை செய்து சுத்தமாக வைக்க வேண்டும்.
* இதையடுத்து ஊற வைத்த விளக்குகளை எலுமிச்சை தோல் கொண்டு நன்கு தேய்த்துக் கழுவவும். பின்னர் சோப்புகளை வைத்து தேய்த்துக் கொள்ளவும். இது விளக்குகளில் உள்ள எண்ணெய் பிசுக்களை எளிதில் நீக்குவதற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
* ஒவ்வொருவரின் வீடுகளிலும் பழைய புத்தகங்கள் மற்றும் பழைய பேப்பர்கள் அதிகளவில் இருக்கும். இவற்றில் தேவையானதை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை அப்புறப்படுத்திக் கொள்ளவும். இதையடுத்து தூசுகள் அதிகம் படியும் அலமாரி மற்றும் புத்தக அலமாரிகளில் உங்களது கவனத்தைச் செலுத்தவும்.
* அடுத்ததாக வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும். அழுகும் நிலையில் காய்கறிகள் ஏதேனும் இருந்தால் அப்புறப்படுத்தவும். ஈரமான துணிகளை வைத்து துடைத்த பின்னதாக பொங்கல் திருநாளுக்குத் தேவைப்படும் பொருள்களை வாங்கி வைக்கவும்.
* வீட்டை சுத்தம் செய்த பிறகு, அலங்காரம் செய்ய வேண்டும். பூக்கள், தோரணங்கள், மற்றும் விளக்குகளைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கலாம். இது பண்டிகைக்கான உற்சாகத்தை அதிகரிக்கும்.
வீட்டை சுத்தம் செய்ய, மேற்கூறிய விஷயங்களைக் கவனத்தில் கொண்டு செயல்பட்டால், வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் பெருகும். சுத்தம் என்பது வெறும் உடல் ரீதியான தூய்மை மட்டுமல்ல, மனதையும் தூய்மைப்படுத்தும் ஒரு செயலாகும். எனவே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டை சுத்தம் செய்து, புதிய தொடக்கத்திற்கு தயாராவோம்.
Read more ; ”உ.வே.சாமிநாதர் பிறந்தநாள்..!! சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!