அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! செவிலியர்களே உடனே அப்ளை பண்ணுங்க..!!
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: செவிலியர்
காலிப்பணியிடங்கள்: 78
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிப்போரின் வயது 50-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
செவிலியர் பட்டயப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https:// Tiruvallur.nic.in என்ற திருவள்ளூர் மாவட்ட இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயற் செயலாளர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், 545. ஆசூரி தெரு, திருவள்ளூர் மாவட்டம் 602001 என்ற அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 31.1.2025