For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பொங்கல் பண்டிகை..!! ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது தொடக்கம்..? பயணிகளே ரெடியா..?

Pongal festival train ticket booking starts tomorrow (September 12).
11:29 AM Sep 11, 2024 IST | Chella
பொங்கல் பண்டிகை     ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது தொடக்கம்    பயணிகளே ரெடியா
Advertisement

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்கவுள்ளது. வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்பவர்கள் மற்றும் கல்வி கற்பவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது.

Advertisement

எனவே, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்வார்கள். இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜன.13ஆம் தேதி திங்கள் கிழமை போகி பண்டிகையும், ஜனவரி 14ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகையும், 15ஆம் தேதி (புதன்கிழமை) மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளன.

மேலும் 16ஆம் தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தான், பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை (செப்.12) தொடங்குகிறது. ஜனவரி 10ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய விரும்புவோர் நாளையும் (செப்.12ஆம் தேதி), ஜன.11ஆம் தேதி பயணம் செய்ய செப்.13ஆம் தேதியிலும், ஜன.12ஆம் தேதி பயணம் செய்ய செப்.14ஆம் தேதியும், ஜன.13இல் பயணம் செய்ய விரும்புவோர் செப்.15ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : திடீர் திருப்பம்..!! என்னிடம் அவர் எதுவுமே சொல்லவில்லை..!! ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி பரபரப்பு அறிக்கை..!!

Tags :
Advertisement