For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பொங்கல் பண்டிகை..!! பயனாளிகளுக்கு வேட்டி, சேலை..!! ரூ.100 கோடி விடுவித்த தமிழ்நாடு அரசு..!!

Ahead of Pongal festival, Rs.100 crore has been set aside for the production of free vetti and saree.
07:19 AM Aug 30, 2024 IST | Chella
பொங்கல் பண்டிகை     பயனாளிகளுக்கு வேட்டி  சேலை     ரூ 100 கோடி விடுவித்த தமிழ்நாடு அரசு
Advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை உற்பத்திக்காக ரூ.100 கோடி விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 2025 பொங்கல் பண்டிகையின்போது இலவச வேட்டி, சேலை வழங்குவதுடன், முதியோர் ஓய்வூதியத் திட்ட பயனாளிகளுக்கும் வழங்கவும், நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 1 கோடியே 77 லட்சத்து 64,476 சேலைகள், ஒரு கோடியே 77 லட்சத்து 22,995 வேட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இலவச வேட்டி, சேலை உற்பத்திக்காக ரூ.100 கோடி விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக தொகை தேவைப்பட்டால் ஒதுக்கீடு செய்யப்படும். வேட்டி, சேலைகள் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய விரல் ரேகை பதிவை கட்டாயமாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளுக்கு வேட்டி, சேலை வழங்கும் நடைமுறையை கண்காணிக்க வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையின்போது, அனுப்பி வைக்கப்பட்டு இருப்பில் உள்ள வேட்டி, சேலைகளை நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : இந்தியாவின் NO.1 பணக்காரரானார் கவுதம் அதானி!. முகேஷ் அம்பானி பின்னடைவு!. எத்தனை கோடி சொத்துகள் தெரியுமா?

Tags :
Advertisement