முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பொங்கல் பண்டிகை..!! இந்த மாவட்டத்திற்கு மட்டும் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை..!! செம குஷியில் மாணவர்கள்..!!

While other districts have a 3-day holiday, Ramanathapuram district will have a 6-day holiday. Due to this, students are very happy.
08:21 AM Dec 24, 2024 IST | Chella
Advertisement

பொங்கல் பண்டிகை என்றாலே பொதுவாக 3, 4 நாட்கள் விடுமுறை இருக்கும். ஆனால், இம்முறை தொடர்ந்து 6 நாட்களுக்கு விடுமுறை வர இருக்கிறது. பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான ஜனவரி 13ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய ஜனவரி 25ஆம் சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அ

Advertisement

அடுத்தபடியாக வழக்கம் போல ஜனவரி 14ஆம் தேதி செவ்வாய்கிழமை தை பொங்கல், ஜனவரி 15ஆம் தேதி புதன் திருவள்ளுவர் தினம், ஜனவரி 16ஆம் தேதி வியாழன் உழவர் திருநாள் என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதற்கு முன்னதாக ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடுகிறது.

இப்படி பார்க்கையில், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 13ஆம் தேதியன்று ஆருத்ரா தரிசனம் திருவிழா முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், 6 நாட்களுக்கு மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கிறது. மற்ற வட்டங்களுக்கு 3 நாள் விடுமுறைக்கு இருந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 6 நாட்கள் விடுமுறை வர இருக்கிறது. இதனால் மாணவர்கள் செம குஷியில் உள்ளனர்.

Read More : ”ஐய்யோ விடாம துரத்துறாங்களே”..!! போலீஸ் முன் இன்று ஆஜராகிறார் அல்லு அர்ஜுன்..!! அந்த வீடியோ வெளியானதால் அதிரடி ஆக்‌ஷன்..!!

Tags :
அரசு அலுவலகங்கள்பொங்கல் பண்டிகைமாணவர்கள்ராமநாதபுரம் மாவட்டம்விடுமுறை
Advertisement
Next Article