For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’பொங்கல் பண்டிகை’..!! 'எல்லா பணமும் வங்கிக் கணக்கில் வரப்போகுது’..!! உயர்நீதிமன்றம் கொடுத்த அட்வைஸ்..!!

11:10 AM Jan 09, 2024 IST | 1newsnationuser6
’பொங்கல் பண்டிகை’      எல்லா பணமும் வங்கிக் கணக்கில் வரப்போகுது’     உயர்நீதிமன்றம் கொடுத்த அட்வைஸ்
Advertisement

தஞ்சை சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 2017 முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு பொங்கல் பண்டிகையின்போதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

Advertisement

பொங்கல் பரிசுத் தொகுப்பில் 20 வகையான பொருட்களுடன், ரூ.1,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. இந்த தொகையை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கவும், கரும்பு கொள்முதலுக்கான பணத்தை கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், "தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட ரூ.1,000 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளை சர்க்கரை கொள்முதல் செய்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க அரசு தயாராக உள்ளது. கடந்தாண்டு மக்களுக்கு வழங்க வெல்லம் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டது. அந்த வெல்லம் உருகிவிட்டதாகவும், கெட்டுப்போய்விட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த மனு கடைசி நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இது விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், "தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களில், குறிப்பாக உரிமைத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்துவதைப்போல, பொங்கல் பரிசுத் தொகையையும் வங்கிக் கணக்கில் செலுத்தலாமே? கரும்பு கொள்முதல் பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தலாமே? இதனால் தமிழ்நாடு அரசுக்கு என்ன சிக்கல்வந்துவிட போகிறது. சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம். இப்போது முடியாவிட்டாலும், அடுத்த பொங்கல் பண்டிகையின்போது செய்யலாம். பொங்கல் பரிசுத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று கூறி இந்த மனு இத்துடன் முடித்துவைக்கப்படுகிறது” என்றனர்.

Tags :
Advertisement