ANDHRA PRADESH| "ஆணுறை மட்டும் தானா இல்லை வயாகராவுமா."? ஆணுறைகளில் அரசியல் கட்சியின் சின்னங்கள்.! YSR காங்கிரஸ் கடும் கண்டனம்.!
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமான களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தங்களது கட்சியின் சாதனைகளை பொதுமக்களுக்கு கூறுவதோடு மட்டுமல்லாமல் தங்களது எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தும் வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று இருக்கும் விசித்திரமான சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் சின்னங்களுடன் ஆணுறை பாக்கெட்டுகள் தொண்டர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது . இதுகுறித்து ஆளும் ஒய்..எஸ்.ஆர் (YSR) காங்கிரஸ் கட்சி தனது 'X' வலைதளத்தில் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறது .
இது தொடர்பாக பதிவிட்டுள்ள ஒய்..எஸ்.ஆர் (YSR) கட்சி, " தெலுங்கு தேசம் கட்சி இவ்வளவு தரம் தாழ்ந்த நடவடிக்கையில் ஈடுபடும் இன்று எதிர்பார்க்கவில்லை. அவர்கள் தங்கள் கட்சியின் தொண்டர்களுக்கு ஆணுறை மட்டும் தான் விநியோகம் செய்கிறார்களா.? இல்லை வயாகராவும் சேர்த்து வினியோகம் செய்கிறார்களா.? என கேள்வி எழுப்பி இருக்கிறது. இந்த சம்பவம் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் வர இருக்கின்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகிறது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.