For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பரபரப்பு...! ஜாஃபர் சாதிக் விவகாரம்... ED அதிர்ச்சி தகவல்... அன்பில் மகேஷ் விளக்க வேண்டும்...! அண்ணாமலை அதிரடி

Jaffer Sadiq affair... ED shocking information... Anbil Mahesh should explain
04:55 PM Dec 16, 2024 IST | Vignesh
பரபரப்பு     ஜாஃபர் சாதிக் விவகாரம்    ed அதிர்ச்சி தகவல்    அன்பில் மகேஷ் விளக்க வேண்டும்     அண்ணாமலை அதிரடி
Advertisement

சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்வரி மொழி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜாஃபர் சாதிக்கின் நிறுவனமான Coalescence Ventures என்ற நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் ஒப்பந்ததாரர் நிறுவனமான Sri Appu Direct என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பொருள்களை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, 2022 – 2023 காலகட்டத்தில், தனது Coalescence Ventures நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது, அமலாக்கத்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது. இதே காலகட்டத்தில்தான், Sri Appu Direct நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துடன் ஒப்பந்தம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்துக்கான பொருள்களை வழங்கியது, ஜாஃபர் சாதிக்கின் Coalescence Ventures நிறுவனம் ஆகும்.

குறிப்பிட்ட காலகட்டத்தில், திமுக நிர்வாகியாக இருந்த ஜாஃபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவே இதன் மூலம் தெரிய வருகிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement