For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பீகார்: "அரசியல் ஆட்டம் இனி தான் ஆரம்பம்.." - நிதீஷ் குமாருடன் மோதல் குறித்து துணை முதல்வர் தேஜஸ்வி பதில்.!

05:30 PM Jan 27, 2024 IST | 1newsnationuser7
பீகார்   அரசியல் ஆட்டம் இனி தான் ஆரம்பம்      நிதீஷ் குமாருடன் மோதல் குறித்து துணை முதல்வர் தேஜஸ்வி பதில்
Advertisement

பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியை கலைத்துவிட்டு பிஜேபியுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் பீகார் மாநிலத்தின் மகா கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்த தனது நிலைப்பாட்டை நிதிஷ்குமார் விளக்க வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக நித்தீஷ் குமாரை அணுக முயற்சி செய்ததாகவும் அவர் தற்போது பிசியாக இருப்பதாகவும் பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் மஹாகத்பந்தன் கூட்டணியில் இருப்பாரா அல்லது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார என்ற கேள்விக்கு பதில் அளித்த பீகார் மாநிலத் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் " இனி பீகார் மாநிலத்தில் அரசியல் ஆட்டம் தொடங்க இருப்பதாக" தெரிவித்திருக்கிறார். தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் கூட்டத்தில் பேசிய தேஜஸ்வி முதல்வர் நிதீஷ் குமார் எப்போதும் மதிப்பிற்குரியவர் என தெரிவித்தார். மஹாகத்பந்தன் கூட்டணியில் உள்ள கட்சிகள் முதலமைச்சரை எப்போதும் மதிப்பவர்கள் எனவும் தனது கட்சி நிர்வாகிகளிடம் கூறினார். மேலும் கடந்த 20 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை குறுகிய காலத்தில் இந்த கூட்டணி ஆட்சி செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு வேலைவாய்ப்பு மற்றும் இட ஒதுக்கீடு என அனைத்து திட்டங்களையும் இந்த ஆட்சி காலத்தில் பீகாரில் செய்து காட்டியதாகவும் தெரிவித்தார். மேலும் பீகாரில் அரசியல் ஆட்டம் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். பீகார் மாநிலத்தில் ஆளும் மஹாகத்பந்தன் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜ் பவனில் நடைபெற்ற குடியரசு தின விழா தேநீர் விருந்தில் கலந்து கொண்டார். எனினும் இந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியை சேர்ந்தவருமான தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்ளாதது கூட்டணியில் பிளவு இருப்பதை காட்டுவதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

இந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவரும் பீகார் மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகுமார் சின்கா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ராஷ்டிர ஜனதாதள கட்சியை சேர்ந்தவரும் பீகார் மாநில கல்வித் துறை அமைச்சர் அலோக் குமார் மேத்தாவும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதவர்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் நிதிஷ்குமார் "இந்தக் கேள்வியை விழாவில் கலந்து கொள்ளாதவர்களிடம் தான் கேட்க வேண்டும்" என பதில் அளித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியுடன் நித்திஷ் குமார் கூட்டணி அமைப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சின்கா" நான் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறேன். எதிர்க்கட்சி கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதான தகவல்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பாரதிய ஜனதா கட்சியின் தலைமை ஒரு மனதாக எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் மஹாகத்பந்தன் கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவு பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் பீகார் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சின்காவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement