பாய்ந்தது வழக்கு.! "10,000 பேரை எறக்கி காட்டவா.?.." சவால் விட்ட அண்ணாமலை.! பொதுமக்கள் பரபரப்பு புகார்.!
.பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு திரட்டுவதற்காக என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை சென்று வருகிறார் . கடந்த வருடம் ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து தனது பயணத்தை துவக்கினார். தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த கன மழைக்கு பிறகு தனது அடுத்த கட்ட பயணத்தை துவங்கி இருக்கிறார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருக்கும் பி.பள்ளிப்பட்டி என்ற கிராமத்தில் பழமையான லூர்து அன்னை கிறிஸ்தவ தேவாலயம் அமைந்திருக்கிறது. தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பாதயாத்திரை நடத்தி வரும் அண்ணாமலை இந்த ஆலயத்திற்குள் நுழைய முற்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் பாஜக தலைவர் அண்ணாமலை தேவாலயத்திற்குள் நுழைவதை தடுத்தனர். இதனைத் தொடர்ந்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது " நான் நினைத்தால் 10,000 பேரை இங்கே திரட்ட முடியும். நான் கூட்டத்தை காட்டவா .? என பொதுமக்களிடம் மிரட்டும் தோனியில் பேசியிருக்கிறார் அண்ணாமலை. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர். இந்தப் புகாரை தொடர்ந்து அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் உனக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.